செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

“மனிதனும் புதைகுழிக்குள் நீதியும் புதைகுழிக்குள்ளா?” மன்னாரில் அமைதி பேரணி!

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகளுக்கு நீதி கேட்டு, மன்னார் அடம்பன் சந்தியில் இருந்து திருக்கேதீஸ்வரம் மாந்தை வரையிலான அமைதி பேரணி ஒன்று நடைபெற்றது.

இப்பேரணி, மாந்தை மேற்கு வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், வியாழக்கிழமை (24) காலை 10.00 மணியளவில் அடம்பன் சந்தியில் இருந்து ஆரம்பமாகி, மாந்தை மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தை நோக்கி முன்னெடுக்கப்பட்டது.

பேரணியில் கலந்து கொண்ட பொதுமக்கள், “எங்கே எங்கள் உறவுகள்?”, “மனிதனும் புதைகுழிக்குள் நீதியும் புதைகுழிக்குள்ளா?”, “வேண்டும் சர்வதேச விசாரணை!”, “இது நாடா இடுகாடா?”, “சர்வதேசமே மௌனத்தை கலை” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்றனர்.

பேரணி மாந்தை திருக்கேதீஸ்வரத்தில் உள்ள மனித புதைகுழி பகுதியில் நிறைவடைந்தபின், அங்கிருந்த அஞ்சலி நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கும், புதைகுழிகளில் கண்டெடுக்கப்பட்டவர்களுக்கும் மலர் தூவி, சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வின் முடிவில், மக்கள் சார்பில் தயாரிக்கப்பட்ட மகஜர், மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளாரிடம் கையளிக்கப்பட்டது.

Related posts

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் உயர்பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம்

wpengine

Ghibli- style Ai image ஆபத்தின் மறுபக்கம் அவதானம் . ..

Maash

ஐக்கிய மக்கள் சக்திக்கிடையிலான இணக்கப்பாட்டுடன், சுயாதீன சின்னத்தில் ஐக்கிய தேசிய கட்சி..!

Maash