பிரதான செய்திகள்

கந்தளாய் வீதியிலுள்ள 5 வர்த்தக நிலையங்களில் கொள்ளை

திருகோணமலை – கந்தளாய் பிரதான வீதியிலுள்ள 5 வர்த்தக நிலையங்களில் இன்று அதிகாலை கொள்ளையிடப்பட்டுள்ளன.

கந்தளாய் பகுதியில் அமைந்துள்ள மரத்தளபாடம், மோட்டார் வாகனங்களின் உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் கடைகளில் பொருட்கள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இதனையடுத்து, வர்த்தக நிலைய உரிமையாளர்களினால் சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த 5 வர்த்தக நிலையங்களில் இருந்தும் சுமார் 90 ஆயிரம் ரூபா பெறுமதியான பணம் திருடப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

யாழில் 2642.29 ஏக்கர் தனியார் காணிகள் முப்படை, மற்றும் பொலிசாரிடம்.

Maash

WhatApp அரட்டைகளை முடக்குவதற்கு புதிய மாற்றம்

wpengine

ரஞ்சனின் வெற்றிடத்தை நிரப்பும் நாடாளுமன்ற உறுப்பினர் யார்!

Editor