பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகர் மகேஷ் பாபு ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்துள்ளார்.
மகேஷ் பாபு, ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானம் மூலம் ஹைதராபாத்திலிருந்து கொழும்புக்கு பயணித்ததாக ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் கூறியுள்ளது.
இந்நிலையில் நடிகர் மகேஷ் பாபுவுடனான பயண அனுபவம் தொடர்பில் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸின் முகப்புத்தக பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இவ்வளவு புகழ்பெற்ற விருந்தினரை விமானத்தில் வரவேற்றதில் எங்கள் குழுவினர் மகிழ்ச்சியடைந்தனர் என ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸின் முகநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
