செய்திகள்பிரதான செய்திகள்

பொது இடங்களில குப்பைகள் கொட்டுவதை ஆதாருத்துடன் நிரூபித்தால் சன்மானம்….!!!!

குப்பைகளை பொது இடங்களில் கொட்டுபவர்களை சரியான ஆதாரத்துடன் எங்களிடம் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்குவதற்கும் நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம். அதேபொன்ரு குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டுபவர்களுக்கு எதிராக தண்டப்பணம் அறவிடுவதற்கும் தீர்மானித்திருக்கின்றோம். பிரதேச மக்கள் எங்களுடன் ஒத்துழைப்பு வழங்கி செயல்பட வேண்டும் என காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் எஸ். பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் திண்மக்கழிவகற்றல் பணியை மிகச் சிறப்பாக செய்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இதன் அடிப்படையில் நேற்று காரைதீவு – 03 லெனின் வீதி பிரதேசத்தில் சட்டவிரோதமாக கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றும் பணியில் காரைதீவு பிரதேச சபை ஊழியர்கள் ஈடுபட்டனர்.

எமது பிரதேசத்தில் உள்ள மக்கள் சட்ட விரோதமாக திண்மக்கழிவுகளை வீதிகளில் கொட்டுகின்ற இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

இது எதிர்காலத்தில் எமது பிரதேசத்தில் சுகாதார சீர்கேடுகளை, சூழல் பாதிப்புகள் ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தும்.

எனவே,சுத்தமான, சுகாதாரமான சூழலையும் அழகான காரைதீவு பிரதேசத்தையும் உருவாக்குவதற்காக எங்களால் ஆன முயற்சிகளை செய்து வருகிறோம். எங்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இது போன்று எதிர்காலத்திலே வருகின்ற ஒவ்வொரு சனிக்கிழமையும் எமது பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் திண்மக்கழிவகற்றல் விடயத்தை மிகச் சிறப்பாக செய்வதற்கு நாங்கள் முயற்சிகள் செய்து வருகின்றோம்.

அதற்கான ஒத்துழைப்பை பொதுமக்கள் எங்களுக்கு தர வேண்டும். எமது பிரதேச சபையின் ஊழியர்கள் என்னோடு இணைந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.- என தெரிவித்துள்ளார்.

Related posts

பிரபல கவாலி பாடகர் அம்ஜத் சப்ரி மீது துப்பாக்கி சுடு

wpengine

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு தொடர்பான கூட்டம்.

wpengine

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடாத்துங்கள் ஜனாதிபதி உத்தரவு

wpengine