செய்திகள்

விறகு சேகரிக்க சென்றவர் மீது மரக்கிளை விழுந்ததில் 3 பிள்ளைகளின் தந்தை பலி.

நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக மஸ்கெலியா, புரவுன்சீக் தோட்ட மோட்டீங்ஹேம் பிரிவில் விறகு சேகரிக்க சென்றவர் மீது மரக்கிளை முறிந்து விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் இன்று சனிக்கிழமை (19 ) வீசிய காற்றின் காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

ACMC மற்றும் SJB உடன்படிக்கையில் தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு.

Maash

முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேனவுக்கு 18 ஆம் திகதி வரை விளக்கமறியல்.

Maash

தலைமறைவான ராஜித சேனாரத்ன….!!!

Maash