செய்திகள்பிரதான செய்திகள்

ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த முன்பிணை மனு நிராகரிப்பு..!!!!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தம்மை கைது செய்யப்படுவதற்கு முன்னர், முன்பிணையில் விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, தாக்கல் செய்த முன்பிணை மனுவை நிராகரித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் சமர்ப்பித்த ஆவணங்களை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட மணல் அகழ்வு தொழிற்பாடுகளை சட்டத்துக்கு முரணாக வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கிய விவகாரம் தொடர்பிலேயே ராஜித தேடப்பட்டு வருகிறார்.

இது தொடர்பில் நடைபெறும் வழக்கு விசாரணைகளில் இதுவரை அவர் ஆஜராகவில்லை. இதையடுத்தே அவரைக் கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சுகாதார உதவிப் பணியாளர்கள் சம்பள பிரச்சினை! அமைச்சர் றிஷாட் பதியுதீன் உடன் நடவடிக்கை.

wpengine

முஸ்லிம் பாடசாலைகள் முதலாம் தவணை விடுமுறை

wpengine

எம்.ஏ. சுமந்திரனின் கருத்துக்கள் தமிழ்த் தேசியத்தினை பலவீனப்படுத்துகின்றது : பிரதமர் வி.உருத்திரகுமாரன் !

wpengine