உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

114 வயது மாரத்தான் ‘ஜாம்பவான்’ பவுஜா சிங் சாலை விபத்தில் உயிரிழப்பு.

பஞ்சாபில் 114 வயது மாரத்தான் ‘ஜாம்பவான்’ பவுஜா சிங் சாலை விபத்தில், உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாபைச் சேர்ந்த 114 வயது மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் பவுஜா சிங் ஜலந்தர்-பதான் கோட் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பியாஸ் கிராமத்தில் தனது வீட்டிற்கு வெளியே நடந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

அக்கம் பக்கத்தினர், படுகாயங்களுடன் அவரை உடனடியாக மீட்டு தனியார் மருத்துவனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ‘தலைப்பாகை சூறாவளி’ என அழைக்கப்படும் பவுஜா சிங் மறைவு பல்வேறு தரப்பினரை சோகத்தில் ஆழ்த்தியது.

பவுஜா சிங் முழு சீக்கிய சமூகத்திற்கும், குறிப்பாக இளைஞர்களுக்கும் ஒரு உத்வேகமாக இருந்தார்” என சீக்கிய சமூக மக்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். இவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Related posts

ஈரானை ஆதரிப்பவர்கள் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறார்கள்.

Maash

திருநங்கைகளின் வேலைக்கு வேட்டு வைக்கும் டிரம்ப்

wpengine

அரசு வேலைக்கு ஆசைப்பட்டு கணவரை கொலை செய்த காதல் மனைவி!

Maash