Breaking
Fri. May 10th, 2024

கிழக்கு மாகாண முதலமைச்சர் அகமட்  நசீருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கனேமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் சட்டத்தரணியான பீ.லியன ஆரச்சி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

கடந்த மாதம் 20 ஆம் திகதி திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வின்போது கடற்படை அதிகாரி ஒருவரை தூற்றியதுடன், சீருடையில் இருந்த மாணவி ஒருவரை அசௌகரியத்திற்கு உட்படுத்தியதாக மனுதாரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நிலையில் அவர்களினதும் தனதும் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக சட்டத்தரணி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மனுவில் முதலமைச்சருக்கு மேலதிகமாக சட்டமா அதிபரின் பெயரும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் நட்டஈட்டுத் தொகையொன்றையும் வழங்க வேண்டும் என்றும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *