செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

வவுனியா வீதியில் வீசிய குப்பையை, வீசியவரையே மீள எடுக்க வைத்த இளைஞர்கள்.

வவுனியா – மன்னார் வீதியில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்திற்கு அருகேயுள்ள காட்டுப்பகுதியில் குப்பை கொட்டியவரை , இளைஞர்கள் சிலர் அவரையே கொட்டிய குப்பையை அள்ள வைத்துள்ளனர்.

குறித்த பகுதியில் தினசரி பலர் குப்பைக்கழிவுகளை வீசிவருவதினால் அவ்விடத்தின் சுற்றுப்புறச்சூழல் மாசடைந்து காணப்படுவதுடன் துர்நாற்றமும் வீசி வருகின்றது.

இந்நிலையில் இன்றையதினம் (10) அவ்விடத்தில் பட்டா ரக வாகனத்தில் வருகை தந்த நபரொருவர் வாகனத்திலிருந்த குப்பைகளை குறித்த வீதியில் வீசியுள்ளார்.

இதனை வீதியுடாக சென்ற இளைஞர்கள் அவதானித்து குறித்த நபருக்கு எச்சரிக்கை விடுத்தமையுடன் வீசிய குப்பைகளை மீள எடுத்துச்செல்லுமாறும் பணித்திருந்தமையுடன் அவர் குப்பைகளை எடுத்துச்செல்லும் வரை அவ்விடத்தில் நின்றனர்.

இந்நிலையில் வீதியில் குப்பை கொட்டுவோர் தொடர்பில் நடவடிக்கை, எடுக்குமாறு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினர் கட்டுப்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

பிரியந்த குமாரவின் வீட்டிற்கு சஜித் பிரேமதாசவினால் தலா 1 மில்லியன் ரூபா நிதி

wpengine

இன்று காஷ்மீர் செல்லும் ராணுவ தளபதி தல்பீர் சிங்

wpengine

வடக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம்! பிரான்ஸ் நகரில் கண்காட்சி

wpengine