பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான “ஹரக் கட்டா” என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்ன கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“ஹரக் கட்டா” சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் விசேட அதிரடிப்படை பிரிவினர் மற்றும் பொலிஸ் பாதுகாப்பு பிரிவினரின் பாதுகாப்பின் கீழ் “ஹரக் கட்டா” வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
