செய்திகள்பிரதான செய்திகள்

மது அருந்தி வாக்க்குவாதம் : படுகொலை செய்யப்பட்டு குப்பையிலே வீசப்பட்ட வர்த்தகர்.!

மாரவில பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர், பல நாட்களாக காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் வென்னப்புவ பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக அவரது நண்பர் ஒருவர் வென்னப்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாரவில, கட்டுநேரிய பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஸ்ரீஜித் ஜயஷன் என்ற இந்த வர்த்தகர், கடந்த 30ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்ததாக வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில், நேற்று (03) மாலை வென்னப்புவ பகுதியில் உள்ள வர்த்தகரின் நண்பரின் வீட்டில் அவரது மோட்டார் வாகனம் கண்டெடுக்கப்பட்டது.

பின்னர், அந்த நண்பரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வென்னப்புவ சிரிகம்பொல பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் குப்பைத் தொட்டியில் காணாமல் போன வர்த்தகரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

கடந்த 30ஆம் திகதி இரவு, வர்த்தகர் தனது ஐந்து நண்பர்களுடன் மது அருந்தியதாகவும், அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, வர்த்தகர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு, குப்பை தொட்டியில் வீசப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்யும் பொருட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related posts

இன்று அதிகாலை முஸ்லிம் வர்த்தகரின் கடை தீக்கரை

wpengine

விடத்தல்தீவில் நவீன வீடமைப்புத் திட்டம் அமைச்சர் றிஷாட் அங்குரார்ப்பணம்

wpengine

மகிந்த அரசாங்கம் எடுத்த தவறான முடிவுகளை போல் தற்போதைய அரசாங்கம் எடுக்கக்கூடாது.

Maash