செய்திகள்பிரதான செய்திகள்

பாம்புப்புற்றுக்கு பால் ஊற்றிய 16 வயது சிறுவன், மின்சாரம் தாக்கி பலி!!

மட்டக்களப்பு முனைக்காடு கிராமத்தில் இன்று புதன்கிழமை காலை மின்சாரம் தாக்கி 16 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள நாகதம்பிரான் ஆலயத்தில் வருடாந்த அலங்கார உற்சவம் இடம்பெற்றுவரும் நிலையில் ஆனி உத்தர நாளான இன்றைய தினம் அதிகாலை வேளை விஷேட பூசை இடம்பெற்றபோது குறித்த சிறுவன் பாம்புப் புற்றுக்கு பாலூற்றி விட்டு அதனருகில் நின்ற போது அருகில் இருந்த மின்குமிழுக்கு இணைக்கப்பட்டிருந்த மின் வடத்திலிருந்த மின் ஒழுக்கு காரணமாக சிறுவனுக்கு மின்சாரம் தாக்கிய நிலையில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளான்.

உயிரிழந்தவர் முனைக்காடு கிராமத்தை சேர்ந்த 16 வயதான சென்தில்குமரன் கியோபன் என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் குறித்த இடத்திற்கு சென்ற கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சடலம் மகிழடித்தீவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related posts

முஸ்லிம் அரசாங்க அதிபர் தலைமையில் தைபொங்கள் வவுனியாவில்

wpengine

பேஸ்புக் அடிமையானவர்களை மீட்க பிரத்தியோக மருத்துவமனை

wpengine

வடமேல் மாகாணத்திற்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம்

wpengine