செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

பட்டப்பகல் திருட்டு, வவுனியாவில் மூவர் கைது..!

வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் திங்கட்கிழமை (30) தெரிவித்தனர்.

வவுனியா, கற்குழி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வந்தவர்கள் வெளியில் சென்ற சமயம் பட்டப்பகலில் வீடு புகுந்து சிலிண்டர். லப்டொப், ரப், கைத் தொலைபேசி, தொலைகாட்சி போன்ற பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளது.

அதில் தொலைபேசி, லப்டொப் என்பன தேக்கவத்தை விளையாட்டு மைதானத்திலிருந்த போது அப்பகுதியூடாக சென்றவர்கள் அதனை எடுத்து வவுனியா பொலிசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து வவுனியா குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரிளுடன் பொலிஸ் குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அத்துடன் குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களும் பொலிசில் முறைப்பாடு செய்தனர்.

இதனையடுத்து, 32,28,21 வயதுடைய மூன்று பேர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் திருடப்பட்ட பொருட்களும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளின் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றின் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

இந்த அரசை வீட்டுக்கு விரட்டியடித்தால்தான் நாட்டுக்கும் மக்களுக்கும் நிம்மதி கிடைக்கும்.

wpengine

வடமாகாண பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கான கூட்டம் யாழ்

wpengine

துரிதமாக கையாளப்பட வேண்டிய விடயத்தை ஆற அமர கையாளும் மு.கா

wpengine