செய்திகள்பிரதான செய்திகள்

கற்பிட்டி கடற்கரையில் 3 இலட்சத்திற்கும் அதிகமான போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது.

கற்பிட்டி முகத்துவாரம் கடற்கரைப் பகுதியில் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 4 பொதிகளில் சுமார் 317000 மாத்திரைகளை கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்ஸ்மன் ரன்வலராச்சி தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள் வியாழக்கிழமை (26) இரவு மேற்கொண்ட தேடுதலின் போது கைப்பற்றப்பட்டது.

கடற்படையினரின் ரோந்து நடவடிக்கையின் ஊடாக மேற்படி போதை மாத்திரை பொதிகளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வந்தவர்கள் கைவிட்டுச் சென்று இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் இதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்ஸ்மன் ரன்வலராச்சி தெரிவித்தார்.

Related posts

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மூவருக்கு மரண தண்டனை.

Maash

தந்தையை இழந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு கிழக்கு ஆளுநர் நீதி ஒதுக்கீடு

wpengine

வவுனியா மாவட்டத்தில் ACMC ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து ஐந்து சபைகளுக்கான கட்டுப்பணம் (14) செலுத்தியது .

Maash