செய்திகள்பிரதான செய்திகள்

விஷர் நாய்கள் கடித்ததில் ஐந்து ஆடுகள் பலி : காத்தான்குடியில் மக்கள் அச்சத்தில்.

காத்தான்குடியில் (23) திங்கட்கிழமை அதிகாலை நகர சபையை அண்மித்த ஷைஹுல் பலாஹ் வீதியில் விஷர் நாய்க்கூட்டம் ஒரு காணியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆறு ஆடுகளை கடித்தது. இதில் ஐந்து ஆடுகள் பலியாகி, ஒன்று காயமடைந்துள்ளதாக காணப்பட்டு வருகின்றது.

காணியில் இருந்த ஒரு சிறிய வழியூடாக நுழைந்த நாய்கள், ஆடுகளை தாக்கி விட்டு தப்பியோடியுள்ளன. சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஆடுகளின் உரிமையாளருக்கு சுமார் ரூ.1.5 இலட்சம் நட்டம் ஏற்பட்டுள்ளது.

இது பொதுமக்களில் மிகுந்த அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறித்த நாய்கள் நாள்தோறும் பகல் மற்றும் இரவு நேரங்களில் வீதிகளில் சுதந்திரமாக சுற்றித்திரியும் நிலையில், இன்று ஆடுகள் எனில் நாளை மக்களும், சிறுவர்களும் தாக்கப்படக் கூடும் என மக்கள் அஞ்சுகின்றனர்.

இதனை முன்னிட்டு, காத்தான்குடி நகர சபை தவிசாளர் மற்றும் சம்பந்தப்பட்ட பொறுப்பதிகாரிகள் உடனடியாக கவனத்தில் கொண்டு, பாவனையற்ற நாய்களை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்கள் எதிர்பார்ப்பு ஆகும்.

Related posts

ஜனாதிபதி அவர்களுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு

wpengine

“டயஸ் போராவின் கீழ் இயங்கும் ஹக்கீமுடன் இணைந்திருக்க முடியாது” ரிஷாட் பதியுதீனுடன் இணைந்தார் ஜவாத்.

wpengine

மீண்டும் வடக்கில் கிறீஸ் பூதம் ! சந்தேகம் வெளியிட்டுள்ள ஈ.பி.டி.பி.

Maash