செய்திகள்பிரதான செய்திகள்

கடற்றொழிலாளர்களுக்கான “சயுர” காப்புறுதி அறிமுகம்.

கடற்றொழிலாளர்களுக்கான “சயுர” காப்புறுதி திட்டம் இன்று புதன்கிழமை முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.

தங்காலை, குடாவெல்ல துறைமுகத்தில் இதற்கான அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

விவசாய பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்திகே ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இந்த விழா இன்று (18) நடைபெறவுள்ளது.

கடற்றொழில் நடவடிக்கையின் போது ஏற்படும் உயிரிழப்பைக் கருத்தில் கொண்டு, ஆண்டுதோறும் புதுப்பிக்கத்தக்க வகையில் இந்தக் காப்புறுதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடற்றொழிலின் போது ஏற்படும் விபத்துகளால் உண்டாகும் உயிர் இழப்புகள், நிரந்தர மற்றும் தற்காலிக இயலாமை, அத்துடன் விபத்துகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் மற்றும் இறுதிச் சடங்கு போன்றவற்றிற்கு இந்த காப்புறுதி திட்டத்தின் ஊடாக நன்மைகள் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஏழு முஸ்லிம் எம்.பிக்களுடன் பிரதமர் இன்று அவசர சந்திப்பு!

Editor

ட்ரோன் கமரா மூலம் மக்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும் நடவடிக்கை வவுனியாவில்

wpengine

உதய கம்மன்பிலவை சந்தித்த ஞானசார

wpengine