அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட 70,000 மெற்றிக்தொன் நெல்லினை சந்தைப்படுத்துவதற்கு நெல் சந்தைப்படுத்தல் சபை தீர்மானித்துள்ளது.
இதற்கான விலை மனுக் கோரலை விரைவில் வெளியிடவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் எம்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசாங்கம் வசமுள்ள நெற்தொகையில் ஒரு கிலோ கிராம் நெல்லினை 24 ரூபாவுக்கு பிராணிகளுக்கு உணவாக வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
கடந்த பெரும் போகத்தில் ஒரு 130,000 மெற்றிக்தொன் நெல்லினை கொள்வனவு செய்துள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை குறிப்பிட்டுள்ளது.