செய்திகள்பிரதான செய்திகள்

சீனா முழுமையாக தலையிட்டு இஸ்ரேலின் பலம் வாய்ந்த அமெரிக்க வான் கட்டமைப்பை பதம் பார்க்க வேண்டும்.

சீனா முழுமையாக தலையிட்டு இஸ்ரேலின் பலம் வாய்ந்த அமெரிக்க வான் கட்டமைப்பை பதம் பார்க்க வேண்டும். அதன்பின் இஸ்ரேலால் வாலாட்ட முடியாது சீனா இதைச் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் சர்வதேச பூகோள அரசியல் துறைசார் விமர்சகராகவும் பெரும்பான்மை சமூகத்தால் கருதப்படும் பாதலி சம்பிகரணவக்க கூறியிருக்கிறார்.

ஆயதுல்லா அலி கொமைனி மற்றும் ஈரான் ஆட்சி இது இரண்டையும் அழிப்பது தான் இஸ்ரேலின் இந்த யுத்தத்தின் நோக்கம் அமெரிக்கா வேறு இஸ்ரேல் வேறு என்று இல்லை இஸ்ரேல் என்பது அமெரிக்கா தான் இந்த யுத்தத்தின் முழு திரைக்கதை வசனமும் அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்டது யுத்தத்தில் பல வெற்றிகளை ஈரான் அடைந்து இருந்தாலும் இறுதி இலக்கு வரை ஈரான் ஆட்சி தவிக்கும் வரை இஸ்ரேல் போரிடும் இஸ்ரேலின் முழு பலமும் அமெரிக்கா தான் எனவே இந்த யுத்தம் ஈரானுக்கு மிகவும் கடினமானது என்றம் தெரிவித்தார்.

மேலும் இதற்கு ஒரு வழி இருக்கிறது சீனா ரஷ்யா தலையிட்டு ஈரானின் பக்கமாக நின்று இஸ்ரேலுக்கு அமெரிக்க துணையாக இருப்பது போன்று துணையாக நின்று இஸ்ரேல் வசமுள்ள அமெரிக்கவான் பலத்தை முடக்க வேண்டும்.

யுக்ரைன் யுத்தம் பல விடயங்களில் பல நாடுகளுடன் பின்னிப்பிணைந்து இருப்பதால் ரஷ்யா முழுமையாக தலையிடாது ஆனால் சீனா முழுமையாக தலையிட்டு இஸ்ரேலின் பலம் வாய்ந்த அமெரிக்க வான் கட்டமைப்பை பதம் பார்க்க வேண்டும் அதன்பின் இஸ்ரேலால் வாலாட்ட முடியாது சீனா இதைச் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் இவ்வாறான ஒரு நிகழ்வு இடம் பெறாவிட்டால் ஈரானால் தாக்குப் பிடிப்பதில் மிகவும் கஷ்டம் அந்த அளவுக்கு மொசாடும் வான் படையும் அமெரிக்கப் பின்னணியும் நெட்டன் யாகுவின் வான் படை வலிமையை உயர்த்தி உள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளின் செல்வங்களைச் சூறையாட அமெரிக்கா வகுத்துள்ள சதிவலையில் அரபு நாடுகள் முழுமையாக சிக்கி உள்ளன அவை அமெரிக்காவின் பொம்மைகளாக இருக்கின்றன அடி பணியாது எஞ்சி இருப்பது ஈரான் மட்டுமே எனவே
ஈரானின் புரட்சி அரசாங்கத்தை அழித்து
1980 களில் இழந்த பொம்மை ஷா அரசாங்கத்தை போன்று ஈரானை
தனது ரிமோட் கண்ட்ரோலில் வைத்திருக்கும் அமெரிக்காவின் திட்டம் எவ்வாறு அமையப் போகிறது என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும் எனவும் அவர் சர்வதேச ஆய்வு கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு தெரிவித்துள்ளார்.

Related posts

சமுர்த்தி கொடுப்பனவை மீளப் பெறும் விவகாரம்: எஸ்.பிக்கு எதிராக மனு

wpengine

China – Sri Lanka Collaborative Project Workshop Reviewing possible causes Kidney Disease

wpengine

பிறைந்துறைச்சேனை மக்களால் அமீர் அலிக்கு ஆதரவு பிரச்சாரம்

wpengine