Breaking
Mon. Nov 25th, 2024

கண்டி நகர மத்தியில் அமைந்துள்ள ஜும்ஆப் பள்ளிவாசல் முன்னால் தற்பொழுது பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிகின்றன.

குறித்த பள்ளிவாசலின் புனர்நிர்மாணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பள்ளிவாசலின் “மினரா” கட்டுமானப் பணிகள் நடைபெற்றால், கண்டி நகரில் அமைந்துள்ள பௌத்தர்களின் புனித தளமான தலதா மாளிகையை விட அது உயரமாக அமையும் எனத் தெரிவித்து கடும்போக்கு பெளத்த அமைப்புக்கள் சில பள்ளிவாசல் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.13312762_1043527695733562_3004171631843175410_n

தலதா மாளிகையின் கௌரவத்தை கருத்தில் கொண்டு கண்டி புனித பூமி வளாகத்தில் அமைக்கப்படும் கட்டடங்கள் அனைத்தும் தலதா மாளிகையை விட உயரம் குறைவாகவே நிர்மாணிக்கப்படவேண்டும் என பாரம்பரிய சட்டம் காணப்படும் சந்தர்ப்பத்தில், கடும் போக்கு முஸ்லிம்கள் சிலர் அதற்கு எதிராக இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.13312762_1043527695733562_3004171631843175410_n (1)

என்றாலும் குறித்த பள்ளிவாசலின் “மினரா” கட்டப்பட்டாலும் அது தலதா மாளிகையை விட உயரமாக அமையாது என பள்ளிவாசல் நிர்வாக சபையினர் தெரிவித்துள்ளனர். அதேவேளை எதிர்ப்புக்கள் காரணமாக “மினரா” கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையிலேயே கடும்போக்கு பெளத்த அமைப்புக்கள் சில பள்ளிவாசலுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.043photo_909317photo_107398

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *