Breaking
Mon. Nov 25th, 2024
SAMSUNG CSC

(அஷ்ரப் ஏ.சமத்)

ரோயல் கல்லுாாி மாணவன்   சசங்க அல்விஸ் கோமா நிலையில் பாதிக்கப்பட்டதை இணைய வலையத்தளங்களின்  செய்திகளை பாா்த்து இரவோடு இரவாக கொழும்புக்கு வந்த  கல்முனை சர்ஜூன் அபுபக்கா் பாதிக்கப்பட்ட மாணவனது  கொள்ளுப்பிட்டி வீடு தேடி உதவினாா்.

ரோயல் கல்லுாாி மாணவன் கடந்த  3 வருடத்திற்கு முன் ரோயல் கல்லுாாியின் நீச்சல் தடாகத்தில் மூச்சுத் தினரி பாதிக்கப்பட்டு அன்றில்  இருந்து  இன்று வரையில்  கோமா நிலையில் வாடுகின்றான்.  இவருக்கு வாழ்வதற்கு வீடொன்று இல்லாமலும் இருந்த நிலையில் நேற்று முன்தினம் பிரதம மந்திரியினால் வீடொன்று வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை ரோயல் கல்லுாாியின் பழைய மாணவா்கள், பாடசாலை அதிபா் ஆசிரியா்கள் உதவ முன் வரவுமில்லை, குடியிருந்த வீட்டைக் கூட  வீதி அபிவிருத்தி அதிகாரியினால் வீதி அபிவிருத்திக்கு உடைக்கப்பட்டதனாலேயே இந்தச் செய்தி  சிங்கள பத்திரிகைகளில் ஊடகங்களில் வெளிவந்தன.இதனை அறிந்த  பிரதமா் ரணில் விக்கிரமசிங்க, மற்றும்  அமைச்சா் சஜித் பிரேமதாச ஆகிய இருவருமே  குடியிருப்பதற்கு மருதானையில்  வீடொன்றை தந்தாக இச் சிறுவனின் தாயாா் கூறினாா்.

SAMSUNG CSC
ஆனால் இச் செய்தியை அறிந்த கல்முனை வி.கா பௌண்டேசன் தலைவா் சர்ஜீன் அதுவும் ஒரு முஸ்லீம்கள் கல்முனை இருந்து உதவுவியதற்கு நன்றி தெரிவித்தாா்.

இங்கு கருத்து தெரிவித்த சா்ஜூன் உலகில் மிக பிரபல்யமாக இயங்கும் ரோயல கல்லுாாி மாணவா்கள் அதிபா்,ஆசிரியா்கள் பழைய மாணவா்கள் நலன் விரும்பிகள் ஏன் இதுவரை இம்மாணவனுக்கு உதவாமல் இருப்பது மிகவும் வருத்தத்தை தருகின்றது.

SAMSUNG CSC
இந்த பரிதாப சம்பவத்தைக் ஊடகவியலாளா் அஸ்ரப் ஏ சமதிடம் கேட்டவுடன் இம் மாணவனின் கல்முனையில் இருந்து உதவ முன்வந்தேன். இதைப் போன்று ஏனையோரும் மனிதாபிமானம்  கொண்டு  இன, மத கலை கலாச்சாரக்களுக்கு அப்பால் உதவுங்கள் என வேண்டிக் கொண்டாா்.

SAMSUNG CSC

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *