செய்திகள்பிரதான செய்திகள்

ரிஷாட் பதியுதீன் மற்றும் சவூதி அரேபிய தூதுவர் இடையே விஷேட சந்திப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானியை, இன்றைய தினம் (16) கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,

“இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவருடன் ஒரு சுமூகமான மற்றும் பயனுள்ள சந்திப்பை மேற்கொண்டதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். இதன்போது, பல்வேறுபட்ட சமகால பிரச்சினைகள் குறித்து நாங்கள் விரிவாகக் கலந்துரையாடினோம். மேலும், நமது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆராய்ந்தோம். இதேவேளை, தூதுவரின் அன்பான விருந்தோம்பலையும், இருதரப்பு உறவுகளை வளர்ப்பதற்கான அவரது தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் நான் பாராட்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வடக்கிற்கான வரவு செலவுத்திட்டமே இது, இதட்கு எதிர்க்கட்சியில் சந்தோஷப்படும் ஒரேயொரு நபர் நானே !

Maash

எரிந்த நிலையில் பொலிஸ்சார்ஜன்ட் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

Maash

வன்னி மாவட்டத்திலுள்ள அனைத்து பட்டதாரிகளுக்குமான விஷேட கலந்துரையாடல்

wpengine