செய்திகள்பிரதான செய்திகள்

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இரத்ததான முகாம்.

தற்போது நிலவும் இரத்த தட்டுப்பாட்டை கருத்திற் கொண்டு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு வழங்குவதற்காக காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நேற்று (29) செவ்வாய்க்கிழமை இரத்ததான முகாமொன்று நடைபெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலகமும் காத்தான்குடி குருதிக் கொடையாளர் சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரத்த தான முகாமில் காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மெளஜூத் தலைமையில் நடைபெற்ற இதன் ஆரம்ப நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சில்மியா, காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நசிர்தீன் உட்பட வைத்திய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Related posts

மகிந்த பிழையென்றால் பொங்கி எழுவீர்கள்! உங்கள் தலைவன் பிழை செய்யதால் ஏன்? மௌனம்

wpengine

கூட்டணிகளை காப்பாற்ற முயல்வதால் விசாரணைகளுக்கு பாதிப்பு – கர்தினால்!

Editor

68 வருடங்களுக்குப் பின் Supermoon இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம்.

wpengine