உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

அமெரிக்க நகரில் செல்பீ சிலை

அமெரிக்க நகரமொன்றில் செல்பீ சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

 

செல்பீ படப்பிடிக்கும் முயற்சிகளின்போது விபத்துக்குள்ளாகும் அபாயம் குறித்து அதிகாரிகள், நிபுணர்கள் பலரும் எச்சரித்து வருகின்றனர்.

 

எனினும் மக்களின் செல்பீ ஆர்வம் குறையவில்லை.
இந்நிலையில், அமெரிக்க, புளோரிடா மாநிலத்தின்  சுகர் லேண்ட் எனும் நகரில் செல்பீ சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

 

பெண்கள் இருவர் சிரித்தவாறு செல் லிடத் தொலைபேசி மூலம் தம்மை படம்பிடித்துக் கொள்வதைப் போன்று இச் சிலை நிர்மாணிக் கப்பட்டுள்ளது.

நகரை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் நகர சபை அதிகாரிகளால் இச் சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. எனினும், இச் சிலை குறித்து உள்ளூர் மக்கள் பலர் சமூக வலைத்தளங்களில் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

 

Related posts

பிணைமுறி நம்பிக்கையில்லா பிரேரணை

wpengine

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற சர்ச்சை! விஷேட கூட்டம்

wpengine

கஞ்சிபானி இம்ரான் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூடத்தில் இருந்து அலைபேசி மற்றும் சிம் அட்டை

wpengine