Breaking
Mon. Nov 25th, 2024
(நாச்சியாதீவு பர்வீன்)

ஆய்வுக் கட்டுரைகள்

இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் இவ்வருட இறுதிக்குள்’தேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன் விழா’ வை நடத்துவதென்று தீர்மானித்துள்ளது. இது பற்றிய தகவல் கடந்த மாதம் பத்திரிகை, இணையத் தளங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்விழாவை முன்னிட்டு ஆறு  ஆய்வரங்குகள் நடத்தப்படவிருக்கின்றன. இங்கே ஐந்து ஆய்வரங்குகளுக்கான கட்டுரைத் தலைப்புகள் தரப்படுகின்றன. மற்றொரு அரங்குக்கான பிரதான தலைப்பு மற்றும் கட்டுரைத் தலைப்புக்கள் இலக்கியவாதிகள், ஆய்வாளர்கள், இலக்கிய ஆர்வலர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றது.  அவற்றை இரண்டு வாரங்களுக்குள்    ashroffshihabdeen@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

பின்வரும் கட்டுரைத் தலைப்புக்களுக்கான கட்டுரைகளை எதிர்வரும் ஜூலை 15ம் திகதிக்குள் கிடைக்கக் கூடியவாறு.  Dr , Jinnah Sherifudeen, 16A, School Avenue, Off Station Road, Dehiwala  என்ற முகவரிக்குத் தபாலில் அனுப்பி வைக்கவும். கட்டுரைகளை அனுப்புவோர் தமது முகவரி மற்றும் தொடர்பு இலக்கம் ஆகியவற்றைக் குறிப்பிட மறக்க வேண்டாம். கட்டுரைகள் ஒரு குழுவினரால் பரிசீலிக்கப்பட்டுச் சிறந்தவை ஏற்றுக் கொள்ளப்படும்.

01. தற்கால இலக்கியம் கட்டுரைத் தலைப்புக்கள்.

01. முஸ்லிம் படைப்பாளிகளின் வலைத்தளப் பதிவுகள்
02. 1970 களின் பின்னரான முஸ்லிம் படைப்பாளிகளின் கவிதைச் செல்நெறி
03. 1970 களின் பின்னரான முஸ்லிம் படைப்பாளிகளின் சிறுகதைச் செல்நெறி
04. 1970 களின் பின்னரான முஸ்லிம் படைப்பாளிகளின் நாவல்களும் பேசுபொருளும்
05. 1970 களின் பின்னரான முஸ்லிம் படைப்பாளிகளின் இலக்கியக் கட்டுரைகளும் பேசுபொருளும்02. இஸ்லாமும் கலைகளும் கட்டுரைத் தலைப்புக்கள்.


01. இலங்கை முஸ்லிம்களின் இசையும் கலைப் பாரம்பரியமும்
02. இலங்கையில் அருகி வரும் முஸ்லிம் பாரம்பரியக் கலை வடிவங்கள்
03. இறைதூதர் காலத்தில் இசையும் கலையும்
04. அடிப்படைவாதச் சிந்தனையும் இஸ்லாமிய இசையும்
05. கஸீதா, புர்தா, தலைப் பாத்திஹா ஆகியவற்றில் இலக்கிய நயம்
06. இஸ்லாமியர் மத்தியில் இசை பற்றிய சர்ச்சைகள் அடிக்கடி ஏற்படுவதற்கான காரணங்கள்03. சினிமா பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம் கட்டுரைத் தலைப்புக்கள்.

01.) சினிமா ரசனை பற்றிய எண்ணக் கரு
02) இஸ்லாமியக் கருத்தியலை முன்கொண்டு செல்ல சினிமா ஊடகத்தின் பங்களிப்பு
03) சினிமா தொடர்பில் இலங்கையில் ஒரு படைப்பாளி எதிர் கொள்ளும் கருத்தியல்சார் பிரச்சினைகள்
04) சினிமா மூலம் இஸ்லாமிய அடையாளங்களைக் கேள்விக்குட்படுத்தல்
05) சினிமா ஊடகத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட இஸ்லாம் பற்றிய தீவிரவாத மாயை
06.) மாற்றுச் சினிமாவுக்கான தேவைப்பாடும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அதைப் பயன்படுத்தலும்

04. எதிரெழுத்து கட்டுரைத் தலைப்புக்கள்.
01) முஸ்லிம் படைப்பாளிகளின் எதிரெழுத்தில் தொனிக்கும் வாழ்வியல் பிரச்சினைகள்
02) முஸ்லிம்களின் எதிர்க்குரல் சர்வதேசத்துக்கு எட்டாமைக்கான காரணிகள்
03) மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள் – சமூக அரசியல் பரிமாணம்
04) சியோனிஸ சக்திகளுக்கெதிரான இஸ்லாமிய எதிர்ப்பிலக்கியம்
05. இஸ்லாமிய தீவிரவாதம் – ஓர் ஆய்வு

05. வாழும் ஆளுமைகள் கவனத்தைக் கவர்ந்த தற்கால முஸ்லிம் படைப்பாளிகள் (ஓர் ஆளுமை மேற்குறித்த 5 சிறு தலைப்புக்களின் கீழும் ஆய்வுக்குட்படல் வேண்டும்)

01) அவர்களது ஆளுமையும் தனித்துவமும்
02) அவர்களது சமூகவியற் பார்வை
03) அவர்களது எழுத்துக்களில் இலக்கிய நயம்
04) அவர்களது எழுத்துக்களில் சமூக, இன நல்லுறவு
05) மக்களின் வாழ்வியலை அவர்கள் பேசும் விதம்

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *