அதிக எடைப்பிரிவில் மூன்று முறை உலகப்பட்டங்களை வென்றுள்ள முகமது அலி (வயது 74) கடந்த வியாழன் அன்று சுவாச பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த 1984ல் பார்கின்சன்ஸ் நோயினால் அவர் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
அதன் பிறகு 4 ஆண்டுகள் கழித்து அவர் ஓய்வு பெற்றார்.
அமெரிக்காவின் தென் பகுதி மாகாணமான கென்டக்கியில் முகமது அலி பிறந்தார். அவருடைய இயற் பெயர் காசியஸ் க்ளே.
1964ல் தன்னுடைய முதல் உலக பட்டத்தை வென்றவுடன் இஸ்லாத்திற்கு மதம் மாறினார்.