மலேசியவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் தலைவருமான அல்ஹாஜ் M.L.A.M. ஹிஸ்புல்லாஹ் குழுவினரும் இன்று காலை மலேசியாவின் பிராக் மாநிலத்தின் முதலமைச்சரை உத்தியோகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடினர்.
பிராக் மாநிலத்தினுடைய முதலமைச்சர் டாக்டர் ஸ்ரீ சம்றி அப்துல் காதிர் அவர்களுக்கும் இராஜாங்க அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.
மிக விரைவில் இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பாகவும் செப்டம்பரில் மலேசியாவில் இடம் பெறவுள்ள பொருளாதார அபிவிருத்தி மகாநாட்டில் இலங்கையின் சார்பில் கலந்து கொள்ளுமாறு முதலமைச்சர் இராஜாங்க அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அத்தோடு அமைக்கப்பட்டு வருகின்ற மட்டக்களப்பு கெம்பஸிற்குத் தேவையான சகல ஒத்துழைப்புக்களையும் தொழில்நுட்ப ரீதியாகவும்,பாட விதான ரீதியாகவும் வழங்குவதாக முதலமைச்சர் டாக்டர் ஸ்ரீ உறுதியளித்தார்.
இக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு கெம்பஸின் உப வேந்தர் S.M. இஸ்மாயில் அவர்களும் முகாமைத்துவப் பணிப்பாளர் அஹமட் ஹிறாஸ் ஹிஸ்புல்லாஹ் அவர்களும் கலந்து கொண்டனர். இச் சந்திப்பின் போது பிராக் மாகாண கல்வி அமைச்சர், பிராக் மாகாண அமைச்சர் டாக்டர் சஹ்லான் மற்றும் பொருளாதார ஆலோசாகர், பிரதம செயலாளர் மற்றும பலர் கலந்து கொண்டனர்.