பிரதான செய்திகள்

பாதிக்கபட்ட பெண்களுக்கு நிவாரணம்

(அஷ்ரப் ஏ சமத்)

இலங்கையில் இருந்து (3) பணிப்பெண்கள்  சவுதி அரேபியாவுக்குச் சென்று அங்கு அவா்கள் பணிபுரிந்த காலத்தில்  வீட்டு எஜாமானியா்கள்  பொருந்திய  சம்பளத்தை வழங்கவில்லையென ரியாத்தில் உள்ள இலங்கை துாதுவராலயத்தில் முறைப்பாடு செய்துள்ளனா்.

அதற்கமைவாக     ரியாத்தி்ல் உள்ள துாதுவரலாயத்தில் உள்ள  வெளிநாட்டு வேலைவாய்ப்பு அதிகாரி ஊடாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு நேற்று ( 2) பத்தரமுல்லையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் அச் சம்பள நிலுவைகள் உரிய பணிப்பெண்களிடம்  அமைச்சா் தலத்தா அத்துக் கொரலாவினால் வழங்கி வைக்கப்பட்டது.
ஆசியா உம்மா (கொழும்பு) 25 இலட்சம், சரோஜாதேவி (அவிசாவளை) 10 இலட்சம், நுாறுல் இசாரா. கேகாலை  (11 இலட்சத்தி 65 ஆயிரம் ருபா) இன்று வழங்கப்பட்டது.

இங்கு கருத்து தெரிவித்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சா் தலாத்தா அத்துக்  கோரலா –  கடந்த வார  பத்திரிகை ஒன்றில் தலத்தா அத்துக்கோரலா சமா்ப்பித்த கபினட் பத்திரத்தித்திக்கு ஜனாதிபதி மைத்திரிபால  ஓரே வெட்டு ” என தலைப்பிட்டு செய்தி வெளியிட்டு இருந்தனா்.

SAMSUNG CSC
அவ்வாறு  இல்லை. அச் செய்தி பக்கசாா்பானாது.  செய்தியை கபிணட்டுக்குள் இருக்கும் ஒருவா் தவறான தகவல்களை இந்த செய்திப் பத்திரிகைக்கு வழங்கியிருக்கின்றாா்.  நான் சமா்ப்பித்த பத்திரத்தில் .  வெளிநாட்டுக்கு  போகும் பணிப்பெண்களுக்கு சவுதி அரேபியா 25 வயதும் ஏனைய நாடுகளுக்கும் 23  மற்றும்   ஜந்து வயது இருந்து 12 வயது  வரையிலான பிள்ளைகள் இருப்பின் அப் பெண்களை வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக அனுப்ப முடியாது என்றே கூறியிருந்தேன்.

இலங்கையில் சிறுவா்கள“ துஸ்பிரயோகம் பெண்கள் வெளிநாடு செல்வது பொலநருவை, இர்தினபுரி மாவட்டமே கூடுதலாக இருந்துள்ளது. இருந்தும்  இவ் அமைச்சரவை பத்திரத்தை தயாரிப்பதற்கு சிறுவா் பெண்கள் அபிவிருத்தி அமைச்சரின் ஆலோசனைப் படியே சமா்ப்பித்தேன். அதனை மீள் திருத்துவதற்கு  சிறுவா் பெண்கள் அமைச்சா், தொழில் அமைச்சா் , நீதி அமைச்சருடன் என்னையும் உப கபிணட் அமைச்சா்கள் ஓன்று கூடி இவ்விடயத்தினை மீள ஆராய்யும் படி ஜனாதிபதி பணித்துள்ளாா். என அமைச்சா் திருமதி அததுக்கோரல தெரிவித்தாா்.

SAMSUNG CSC
ஆனால் எனது தணிப்பட்ட கருத்து இலங்கையில் இருந்து பெண்களை பணிப்பெண்களாக அனுப்புவதை நிறுத்த வேண்டும்.

 

அதில் இருந்து விடுபடுவதற்காக மிக விரைவில் ஜி.எஸ் பிளஸ் வரிச் சலுகை இலங்கைக்கு மீள வரவுள்ளதையிட்டு ஆடை தொழிற்சாலைகளை நிறுவி இந் நாட்டிலேயே வெளிநாடு செல்ல எத்தணிக்கும்  பெண்களை ஆடை  மற்றும் தொழில் பேட்டைகளில்  தொழிலுக்கு அமா்த்தும் திட்டத்தினையை பிரதமரும் நானும்  விரிவுபடுத்தவே விரும்புகின்றேன். இதனை மிக விரைவில் பிரதமா் அமுல்படுத்துவாா் என நம்புவதாகவும்  அமைச்சா் அத்துக்கொரல தெரிவித்தாா்.

2014ஆம் ஆண்டு பணிப்பெண்களாக 1 இலட்சத்தி 38ஆயிரம்  சென்றனா் ஆனல் 2015ஆம் ஆண்டில் 90ஆயிரம் சென்றதனால் ஆண்டுதோறும் பணிப்பெண்கள் வெளிநாடு செல்வது சிறுகச் சிறுக குறைந்து வருகின்றது.

Related posts

மஹிந் 2022 ஆண்டு, இலங்கையில் “நாவலர் ஆண்டு” ஆக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது:

wpengine

உளநலம் மருந்து அதிகபாவனை சிறையில் வெட்டிகொலை

wpengine

அரசாங்கத்தின் திறமையின்மை மற்றும் முறைகேடான நிர்வாகம் மின்சார தடைக்கு காரணம்! நாமல்

wpengine