செய்திகள்பிரதான செய்திகள்

கல்பிட்டியில் 1142 கிலோ 700 கிராம் உலர் மஞ்சள் மீட்பு . .!

கற்பிட்டி – பாலாவி பிரதான வீதியின் தளுவ பகுதியில் இருந்து நேற்று (10) பெருந்தொகையான உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமேற்கு கடற்படை கட்டளைக்குச் சொந்தமான இலங்கை கடற்படை விஜய பிரிவின் கடற்படையினர் குறித்த பகுதியில் மேற்கொண்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான லொறியொன்றினை கடற்படையினர் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது குறித்த லொறியில் சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட மஞ்சள் கடற்படையிரால் கைப்பற்றப்பட்டுள்ளது .

குறித்த லொறியில் 31 உரமூடைகளில் அடைக்கப்பட்ட நிலையில் 1142 கிலோ 700 கிராம் உலர் மஞ்சள் இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த லொறியின் சாரதி சந்தேகத்தின் பெயரில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர், 27 வயதுடையவர் எனவும் அவர் மதுரங்குளி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட உலர்ந்த மஞ்சள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கெப் வண்டி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் திணைக்கள அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் மேலும் குறிப்பிட்டனர்.

Related posts

வடக்கு மாகாணத்தின் அனைத்து அலுவலகங்களுக்கும் விடுமுறை

wpengine

ஆபாச படம் பார்த்தால், கடவுள் பக்தி அதிகரிக்கும் :தவறு செய்கிறோம்

wpengine

இரணைத்தீவில் அடக்கம் செய்வதற்கு கடைப்பிடிக்க வேண்டிய விசேட வழிகாட்டுதல்கள்

wpengine