செய்திகள்பிரதான செய்திகள்

ஷிரந்தி ராஜபக்சவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாடு..!

கம்பஹா பகுதியில் உள்ள ஒரு நிலத்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச சட்டவிரோதமாக பரிவர்த்தனை செய்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாடு அளித்துள்ளதாக பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

ஷிரந்தி ராஜபக்ச குறித்த நிலத்தை  வேறொருவருக்கு விற்றுவிட்டு, பின்னர் அது ஒரு பௌத்த மையத்திற்கு நன்கொடையாக வழங்கியதாக மகிந்த ஜெயசிங்க நாடாளுமன்றத்திற்கு கூறியுள்ளார்.

பௌத்த விகாரைக்கு சொந்தமானதாகக் கூறப்படும் இந்தக் காணியின் காணி உரிமைகளை ஆய்வு செய்தபோது, ​​அந்தக் காணிஷிரந்தி ராஜபக்சவுக்கு செந்தமானது எனவும், அவர் அதை 2012 பிப்ரவரி (05) அன்று கம்பஹா, மானெல்வத்தவில் உள்ள நாகானந்தா பௌத்த மையத்திற்கு மாற்றியமைத்தமை தெரியவந்ததாகவும் கூறியுள்ளார்.

இது பௌத்த மையத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலையில், 2023 அக்டோபர் 10 ஆம் திகதி தெஹிவளைப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு விற்கப்பட்டதாகவும், அந்த நிலத்தில் உள்ள கட்டிடத்திற்கான மின்சாரக் கட்டணத்தை ஒரு மதகுரு செலுத்தியதாகவும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில் இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தக் கோரி குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாடு அளித்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

வவுனியா நகர சபையின் இனவாத நடவடிக்கைக்கு முஸ்லிம்கள் கண்டனம்

wpengine

தபால் மூல வாக்களிப்பினை மேற்பார்வை செய்யும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கான தெளிவூட்டல் கலந்துரையாடல்!

Maash

அரசியல்வாதிகளை சந்தித்திருக்கிறேன்! அனைவரும் மக்கள் நலன்சார்ந்த விடயங்களை என்னிடம் கேட்கவில்லை.

wpengine