செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

யாழ்.நாவற்குழியில் விடுதி முற்றுகை – பெண்கள் உட்பட நால்வர் கைது!

யாழ்ப்பாணம்- நாவற்குழி பகுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக சந்தேகிக்கப்பட்ட வீடொன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டதுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாவற்குழி தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில் சந்தேகத்திற்கிடமான வகையில் வீட்டில் இயங்கி வந்த விபச்சார விடுதியே இன்றைய தினம் (9) யாழ்.மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது.

இதன்போது 68 வயதான வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டதுடன் அளவெட்டி, குருநகர், கொடிகாமம் போன்ற பிரதேசங்களை சேர்ந்த 40, 42, 53 வயதுடைய மூன்று பெண்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து,கைதான நால்வரையும் மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

ஜனவரி 12 முதல் போலீஸ் சுற்றிவளைப்பில் இதுவரை சிக்கிய 30,000 அதிகமானோர்கள்.

Maash

Duties and functions of new Ministers gazetted

wpengine

ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகும் ஐ.தே.க

wpengine