அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ உடல்நிலையில் நலமாக இருக்கின்றார் – நாமல் ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடல்நிலையில் நலமாக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நிதி மோசடி வழக்கு தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட டெய்சி பொரெஸ்ட் பாட்டி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை (07) காலை  ஆஜராகியுள்ளார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில், 

மஹிந்த ராஜபக்ஷ சுகயீனம் காரணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தd.

ஆனால் நான் வீட்டிற்கு சென்று பார்த்த போது தந்தை மஹிந்த ராஜபக்ஷ நலமாக இருந்தார் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். 

Related posts

அம்பாறையில் முஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னத்தில் தனித்துக் களம் இறங்க முடிவு .

Maash

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெற வேண்டும்! -மனோ கனேசன்-

Editor

சமஷ்டியால் இனவாதம் தலைதூக்கும் என்பது பைத்தியக்காரத்தனம்

wpengine