பிரதான செய்திகள்

வரிக்கு எதிராக நாளை பாரிய போராட்டம்; ஜே.வி.பி

(எம்.எம்.மின்ஹாஜ்)

அரசாங்கம் மக்களின் மேல் சுமத்தும் வரிக்கு எதிராக, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நாளை பாரிய போராட்டமொன்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோரும் தொழிற்சங்க சங்கத்தின் தலைவர் லால் காந்த உள்ளிட்ட பலர் கலந்துக்கொள்ள உள்ளனர்.

மேற்படி ஆர்ப்பாட்டம், அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டகாரர்களினால் பிற்பகல் 3 மணிக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியாக மருதானை டெக்னிக்கல் சந்தியில் ஆரம்பித்து கோட்டை புகையிரத நிலையம் வரைக்கும் பேரணியாக செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதி வேட்பாளர் சஜித்துக்கு சவால் விடுத்த மக்கள் விடுதலை முன்னணி

wpengine

பத்திரிக்கையாளர் சங்கத்தின் 61வது ஆண்டு விழா ஜனாதிபதி கௌரவிப்பு

wpengine

அமெரிக்கா வரி உயர்வு பட்டியலில் இடம்பிடிக்காத இலங்கை: வரி விதித்த நாடுகளின் பட்டியல்.

Maash