பிரதான செய்திகள்

சுட்டுக்கொலை ,பிரதான குற்றவாளிக்கு மரண தண்டனை..!

கொழும்பு பொரளையில், ஹெட்டியாராச்சிகே துமிந்த என்ற நபரை சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான குற்றவாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு கொழும்பு, பொரள்ளை, வனாத்தமுல்ல பிரதேசத்தில் உள்ள சிகையலங்கார நிலையம் ஒன்றிற்குள் வைத்து ஹெட்டியாராச்சிகே துமிந்த சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

குற்றவாளியான கே.எம் சரத் பண்டார என்று அழைக்கப்படும் எஸ்.எப் சரத் என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் நவரத்ன மாரசிங்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கின் சந்தேக நபர்களான தெமட்டகொடை சமிந்த உள்ளிட்ட மூவரை விடுவித்து விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

கோத்தா வந்தால் வீதிக்கு இறங்குவோம்! – அஸாத் சாலி

wpengine

ஜனவரி மாதம் முதலாம் திகதி 4000 ரூபா விசேட கொடுப்பனவு

wpengine

சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது பிரச்சாரம்

wpengine