அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

425 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு..!

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக கடந்த 17ஆம் திகதி முதல் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை நண்பகல் 12 மணிவரை நாடளாவிய ரீதியில் 25 மாவட்டங்களிலும் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதற்கமைய குறித்த காலப்பகுதிக்குள் 336 உள்ளுராட்சிமன்றங்களுக்காக சுமார் 2900 குழுக்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளன.

அவற்றில் 2260 குழுக்கள் அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துபவையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் 2900 இற்கும் மேற்பட்ட வேட்பு மனுக்களில் சுமார் 425 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, ‘வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் குழுவால் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன. வேட்புமனு நிராகரிக்கப்பட்டதன் பின்னர், நிராகரிக்கப்பட்ட ஒவ்வொரு குழுவுக்கும் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களுடன் எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்படும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு

கொழும்பு மாநகரசபைக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களில் 5 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. பொதுஜன ஐக்கிய முன்னணி, ஜனநாயக தேசிய கூட்டணியாக இரு அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு மற்றும் 3 சுயாதீன குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளன. சீதாவாக்கை பிரதேசசபைக்கான ஐக்கிய தேசிய தேசிய கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீஜயவர்தனபுர கோட்டை நகரசபைக்காக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு, ஹோமாகம பிரதேசசபைக்காக சுயாதீன குழு சமர்ப்பித்த வேட்புமனு, தெஹிவளை – கல்கிசை மாநாகரசபைக்காக அகி இலங்கை மக்கள் காங்ரஸ் மற்றும் சுயாதீன குழுவொன்றால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

மொரட்டுவை மாநாகரசபைக்காக சுயாதீன குழுவொன்றால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு, கடுவலை நகரசபைக்காக சுயாதீன குழு மற்றும் இரண்டாம் பரப்பரை கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள், மஹரகம நகரசபைக்காக பொதுஜன ஐக்கிய முன்னணி சமர்ப்பித்த வேட்புமனு, கெஸ்பேவ நகரசபைக்காக லங்கா மக்கள் கட்சி சமர்ப்பித்த வேட்புமனு, கொட்டிகாவத்த – முல்லேரியா பிரதேசசபைக்காக இரண்டாம் தலைமுறை சமர்ப்பித்த வேட்புமனு என்பன நிராகரிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம்

யாழ். மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவிக்கையில், யாழ். தேர்தல் மாவட்டத்தில் இம்முறை தேர்தலுக்காக 148 கட்சிகளும் 27 சுயேட்சைக் குழுக்களுமாக கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தனர்.  இதில் 136 கட்சிகளும் 23 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தன.

136 கட்சிகளுடைய நியமனப்பத்திரங்களும் 10 சுயேட்சைக் குழுக்களுடைய நியமனப்பத்திரங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை, 22 கட்சிகளுடைய நியமனப்பத்திரங்களும் 10 சுயேட்சைக் குழுக்களுடைய நியமனப்பத்திரங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

யாழ் மாநகரசபைக்கான வேட்புமனுவில் தமிழ் மக்கள் கூட்டணி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, ஈரோஸ் ஜனநாயக முன்னணி, ஆகிய கட்சிகளுடைய வேட்புமனுக்களும், ஞானப்பிரகாசம் சுலக்சன், நரேந்திரன் கவுசல்யா ஆகியோர் தலைமையிலான சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

வல்வெட்டித்துறை நகரசபைக்கான வேட்புமனுவில் இராமச்சந்திரன் சுரேன், யோகேஸ்வரி அருளானந்தம்  ஆகியோர் தலைமையிலான சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

பருத்தித்த்துறை நகரசபைக்கான வேட்புமனுவில் அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

சாவகச்சேரி நகரசபைக்கான வேட்புமனுவில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி கட்சியினுடைய  வேட்புமனுவும், மகாலிங்கம் சதீஸ், பெரியான் சிவகுருநாதன் ஆகியோர் தலைமையிலான சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

காரைநகர், ஊர்காவற்றுறை, நெடுந்தீவு ஆகியவற்றின் பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளன.

வேலனைப் பிரதேச சபைக்கான வேட்புமனுவில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி கட்சியினுடைய  வேட்புமனுவும், துரைராஜா சுஜிந்தன் தலைமையிலான சுயேட்சைக் குழுவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில் சவரிமுத்து ஸ்டாலின் தலைமையிலான சுயேட்சைக் குழுவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், ஸ்ரீ  இலங்கை கம்னியூஸ்ட் கட்சியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், தமிழ் மக்கள் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், மக்கள் போராட்ட முன்னணி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

வடமராட்சி தென்மேற்கு  பிரதேச சபைக்கான வேட்புமனுவில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, பொதுஜன ஐக்கிய முன்னணி, ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்களும்இ தவம் தவனிலாவின் தாசன் தலைமையிலான சுயேட்சைக் குழுவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

பருத்தித்துறை பிரதேச சபைக்கான வேட்புமனுவில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் கூட்டணி, பொதுஜன ஐக்கிய முன்னணி, ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்களும் அல்பிரட் ரெஜி ராஜேஸ்வரன் தலைமையிலான சுயேட்சைக் குழுவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

சாவகச்சேரி பிரதேச சபைக்கான வேட்புமனுவில்இ வைத்தியலிங்கம் ஜெகதாஸ் என்பவர் தலைமையிலான சுயேட்சைக் குழுவும் குணரட்ணம் குகானந்தன் என்பவர் தலைமையிலான சுயேட்சைக் குழுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

நல்லூர் பிரதேச சபைக்கான வேட்புமனுவில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்களும் திலீப் தீபாரஞ்சன் தலைமையிலான சுயேட்சைக் குழுவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்ட, உதவித்தேர்தல் ஆணையாளர் வேலாயுதம் சிவராசா தெரிவிக்கையில்,  பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு ஏழு அரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு சுயேட்சைக்குழுக்கள் தாக்கல் செய்த வேட்பு மனுவில் ஒரு சுயேட்சைக்குழுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. ஆகவே பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு ஏழு அரசியல் கட்சிகளினதும் ஒரு சுயேட்சைக்குழுவின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கரைச்சி பிரதேச சபைக்கு பத்து அரசியல் கட்சிகளும் மூன்று சுயேட்சைக்குழுக்களும் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.மூன்று அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்களும் இரண்டு சுயேட்சைக்குழுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஏழு கட்சிகள் மற்றும் ஒரு சுயேட்சைக்குழுவின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றார்.

முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான அ.உமாமகேஸ்வரன் தெரிவிக்கையில்,

மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்காக 38 அணிகள் வேட்புமனு தாக்கல் செய்தன. அதில்  34 அணிகளின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் 2 அரசியல் கட்சிகளதும் 2 சுயேட்சை குழுக்களினதுமாக 4 வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளன.ஷ

கரைதுறைப்பற்று பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 10 கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்ததோடு புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 7 கட்சிகளும் 3 சுயேட்சைக்குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

துணுக்காய் பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 6 கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களும் வேட்புனு தாக்கல் செய்ததோடு, மாந்தை கிழக்கு பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 6 ஆறு கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களும் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.

இதில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் 2 சுயேட்சைக் குழுக்களினதும் கரைதுறைப்பற்று பிரதேச சபையில் போட்டியிடும் பொதுஜன ஐக்கிய பெரமுன கட்சி, ஸ்ரீ லங்கா மகஜன பக்சய ஆகிய கட்சிகளினதும் வேட்புமனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன.

மன்னார்

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும், தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான   க.கனகேஸ்வரன் தெரிவிக்கையில், மாவட்டத்தின் 4 உள்ளுராட்சி மன்றங்களுக்கு 38வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள்  உள்ளடங்களாக 8 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன

மன்னார் நகர சபையில் 09 கட்சிகளினதும்,ஒரு சுயேட்சைக்குழு உள்ளடங்களாக 10 வேட்பு மனுக்கள் கிடைக்கப்பெற்றது.முசலி பிரதேச சபைக்கு  09 கட்சிகளினதும்,ஒரு சுயேட்சைக்குழு உள்ளடங்களாக 10 வேட்பு மனுக்கள் கிடைக்கப்பெற்றது.

நானாட்டான் பிரதேச சபைக்கு 07 கட்சியினதும் ஒரு சுயேட்சைக்குழு உள்ளடங்களாக 8 வேட்பு மனுக்கள் கிடைக்கப்பெற்றது.மாந்தை மேற்கு பிரதே சபைக்கு 9 கட்சியினதும் ஒரு சுயேட்சைக்குழு உள்ளடங்களாக 10 வேட்பு மனுக்கள் கிடைக்கப்பெற்றது.

முசலி பிரதேச சபைக்கு கிடைக்கப்பெற்ற 10 வேட்பு மனுக்களில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

நானாட்டான் பிரதேச சபைக்கு கிடைக்கப்பெற்ற 8 வேட்பு மனுக்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு கிடைக்கப்பெற்ற 10 வேட்பு மனுக்களில்  இலங்கை தமிழரசு கட்சி,ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு,சிறிலங்கா தொழிலாளர் கட்சி,சர்வஜனம் அதிகாரம் ஆகிய நான்கு கட்சிகளினதும்,ஒரு சுயேட்சைக்குழு உள்ளடங்களாக 5 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகரசபைக்கு கிடைக்கப்பெற்ற 10 வேட்பு மனுக்களில் பொதுஜன ஐக்கிய முன்னணி,மற்றும் சுயேட்சைக்குழு உள்ளடங்களாக 2 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்றார்.

வவுனியா

வவுனியா மாவட்டத்தின் அரச அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான பி.ஏ. சரத்சந்திர தெரிவிக்கையில்,  103உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 1,231 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இதுவரை நகரசபையாக இருந்து தரமுயர்த்தப்பட்ட வவுனியா மாநகர சபைக்கு முதலாவது தேர்தலாக இது அமைந்துள்ளது. இம்முறை மாநகர சபையில் மொத்தமாக 20 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

அதற்காக 10அரசியல் கட்சிகளும் 2 சுயேட்சை குழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தன. அவற்றில் மக்கள் போராட்ட முன்னணியின் வேட்பு மனு முழுமையாக நிராகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியில் வேட்பாளர் ஒருவர் நிராகரிக்கப்பட்டுள்ளார். அதன்படி 11 தரப்புக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு 26 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். அதற்காக 12 அரசியல் கட்சிகளும் 4 சுயேட்சை குழுக்களும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தது. அவற்றில் ஜனநாயக தேசிய கூட்டணி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஒரு சுயேட்சை குழுவின் வேட்பு மனுக்கள் நிராகரிக்க பட்டுள்ளதுடன் 13 தரப்புக்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

வெண்கல செட்டிகுளம் பிரதேச சபைக்கு18 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். அதற்காக 10 அரசியல் கட்சிகளும் 2 சுயேட்சை குழுக்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் விண்ணப்பித்த 12 தரப்புக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

வவுனியா வடக்கு பிரதேச சபையில் 23உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். அதற்காக 09 அரசியல் கட்சிகளும் 0 2சுயேட்சைகுழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தது. அவற்றில்,இரண்டு சுயேட்சை குழுவின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 9தரப்புக்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையில்16 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். அதற்காக 07அரசியல் கட்சிகளும் 2 சுயேட்சை குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் அவை அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதேவேளை தேர்தலில் போட்டியிடுவதற்காக 71 தரப்புக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தது.அவற்றில் 11 தரப்புக்கள் வேட்புமனுக்களை கையளித்திருக்கவில்லை என்றார்

திருகோணமலை

திருகோணமலை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட செயலாளருமான ஹேமந்த குமார தெரிவிக்கையில், மாவட்டத்தில் 13உள்ளுராட்சி சபைகளில் போட்டியிடுவதற்காக 126அரசியல் கட்சிகளும், 12சுயேட்சைக் குழுக்களும் தமது வேட்பு மனுக்கள் கையளித்திருந்தன.

இதில் 23அரசியல் கட்சிகளினதும், 03சுயேட்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 103அரசியல் கட்சிகளினதும், 03சுயேட்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திருகோணமலை மாநகரசபை, கிண்ணியா நகரசபை உள்ளிட்ட 13 உள்ளுராட்சி மன்றங்களுக்கான 129 வட்டாரங்களில் 136 பேர் வட்டார ரீதியாகவும் 123 பேர் விகிதாசார அடிப்படையிலும் மொத்தமாக 259 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்காக 103 அரசியல் கட்சிகளும், 03 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடவுள்ளனர்.

மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் உதவி தேர்தல் ஆணையாளர் எம்.பி.எம். சுபியான் தெரிவிக்கையில், 12 உள்ளுராட்சி மன்றங்களுக்கு 139 கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதுடன் 118 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்குதல் செய்யப்பட்டது. இதில் 17 வேட்பாளர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் 101 வேட்பாளர்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் 2 நகரசபை 1 மாநகரசபை 9 பிரதேச சபை உட்பட 12 உள்ளுராட்சி மன்றங்களுக்காக கோறளைப்பற்று வடக்கு சபையில் சர்வின அதிகாரம் மற்றும் அகில  இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஏறாவூர் பற்று பிரதேச சபையில் விநாயகமூர்த்தி விஜயராஜ தலைமையிலான சுயேட்சைக்குழு அ ஏறாவூர் நகர சபையில் 10 அரசியல் கட்சிகள் ஒரு சுயேட்சைக்குழு உட்பட 11 வேட்புமனுக்கல் தாக்குததல் செய்யப்பட்ட அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபைக்கு 7 அங்கீகரக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களுமாக 9 வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் போரதீவுபற்று பிரதேசசபையில் 5 கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்ததில்ல் ஜக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சிவனேசராசா ஒளிர்வளசுதன் மற்றும் அரசஅரத்தினம் சப்த தவதீஸ் ஆகியோரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபைக்கு 9 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சைக்குழு உட்பட 10 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது இதில் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் , ஸ்ரீ தொழிலாளர் கட்சி, பொதுஜன ஜக்கிய முன்னணி, ஜக்கிய தேசிய கட்சிகளுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் ஜக்கிய மக்கள் சக்த்தியின் கருணாநிதி தர்சிகா என்பவருடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது

மண்முனைபற்று பிரதேச சபைக்கு 11 கட்சிகளும் 7 சுயேட்சைக் குழுக்களுமாக 18 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டன இதில் ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸ், சோமசுந்தரம் மகேந்திரன் தலைமையிலான  சுயேட்சைக்கு,  கிருஸ்ணபிள்ளை கியானர், மற்றும் செல்லத்துரை தங்கவேல் தலைமையிலான சுயேட்சைக்குழு மற்றம் ஸ்ரீ தொழிலாள் கட்சிகளின் வேட்புமனு நிராகரிப்பு

நல்லதம்பி சுரேந்திரன் சுயேட்சைக்குழுவில் திலகவதி சுரேந்தின், குணசுந்தரம் திவாகர்,  வடிவேல் பவழக்கொடி ஆகியோரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் கோரளைப்பற்று பிரதேசசபைக்கு 8 கட்சிகளும் 3 சுயேட்சைக்குழுக்கள் உட்பட 11 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன  இதில் விமலசேன லவக்குமாhர் தலைமையிலான மற்றும் குணரத்தினம் புலேந்தின் தலமையிலான சுயேட்சைக்குழுக்கள் இரண்டு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் தேசிய மக்கள் சக்த்தியின் செல்லத்தம்பி விமலராஜ் என்பவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கு  10 கட்சிகளும் ஒரு சுயேச்சைக்குழு உட்பட 11 வேட்புமனுக்கல் தாக்கல் செய்தன இதில் அனைத்து வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது

காத்தான்குடி நகரசபையில் 7 அரசியல்கட்சிகளும் 3 சுயேட்சைக்குழுக்கள் உட்பட 10 வேட்புமனு தாக்கல் தெச்தன இதில் சர்வஜன அதிகாரம் கட்சியின் வேட்புமன நிராகரிக்கப்பட்டதுடன்  மண்முனை மேற்கு பிரதேச சபைக்கு 7 அரசியல்கட்சிகள் வேட்புமனு தாக்கல் இனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டது

மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்கு 5 கட்சிகளும் ஒரு சுயேட்சைக்குழு உட்பட 6 வேட்புமனு தாக்கல் செய்தன. இதில் ஜக்கிய மக்கள் சக்தி வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது என்றார்.

நுவரெலியா

நுவரெலியா மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலர் துஷாரி தென்னகோன் தெரிவிக்கையில், இம்முறை 97 அரசியல் கட்சிகளும் 13 சுயேச்சை குழுக்களுமாக மொத்தம் 110 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இவற்றில் 18 கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் 5 சுயேச்சை குழுக்களின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் இம்முறை 79 அரசியல் கட்சிகளும் 8 சுயேச்சை குழுக்களும் களமிறங்குகின்றன.

கொத்மலை பிரதேச சபையில் போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியவற்றின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

மஸ்கெலியா பிரதேச சபைக்கு தாக்கல் செய்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், சர்வஜன அதிகாரம் கட்சி, ஈரோஸ் ஜனநாயக முன்னணி, சமாஜவாதி சமாதான கட்சி ஆகியன நிராகரிக்கப்பட்டுள்ளன.

வலப்பனை பிரதேச சபைக்கு தாக்கல் செய்த மக்கள் போராட்ட அமைப்பு எனும் கட்சி நிராகரிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா பிரதேச சபையில் சுயேச்சைக் குழு ஒன்றும் ஈரோஸ் ஜனநாயக முன்னணியும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

கொட்டகலை பிரதேச சபையில் ஐக்கிய தேசிய கூட்டமைப்பு ஸ்ரீலங்கா கொமியுனிட்ஸ் கட்சியும் ஐக்கிய சமாஜவாதி கட்சியும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

நோர்வூட் பிரதேச சபையில் ஐக்கிய தேசிய கூட்டமைப்பும் சுயேச்சை குழுக்கள் இரண்டும் ஸ்ரீலங்கா கொமியுனிட்ஸ் கட்சியும் ஈரோஸ் ஜனநாயக முன்னணியும் ஜனநாயக ஐக்கிய முன்னணியும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஹங்குரன்கெத்த பிரதேச சபையில் சுயேச்சை குழுவொன்றும் சர்வஜன பலய கட்சியும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அம்பகமுவ பிரதேச சபையில் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஒரு வேட்பாளர் மாத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளார்.

அட்டன் -டிக்கோயா நகர சபையில் ஸ்ரீலங்கா கொமியுனிட்ஸ் கட்சி சார்பில் ஒரு வேட்பாளர் நிராகரிக்கப்பட்டுள்ளார். அக்கரபத்தனை பிரதேச சபையில் ஒரு சுயேச்சைக் குழு மாத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது. தலவாக்கலை – லிந்துலை நகர சபையில் ஐக்கிய தேசிய கூட்டமைப்பு மாத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது என்றார்.

கண்டி

கண்டி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி இந்திக்க உடவத்த தெரிவிக்கையில், மாவட்டத்திற்கு 230 குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்திய போதிலும் அரசியல் மற்றும் சுயேற்சைக் குழுக்களைச் சேர்ந்த 210 கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களால் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.   அங்கீகரிக்கப்பட்ட 52 அரசியல் கட்சிகள் மற்றும் 06 சுயேச்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. நாவலப்பிட்டி நகரசபை மற்றும் மெததும்பர பிரதேச சபைக்கு மட்டும் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப் படவில்லை

கண்டி மாநகர சபையில் அங்கீகரிக்கப்பட்ட 04 அரசியல் கட்சிகள் மற்றும் 02 சுயேட்சைக் குழுக்களின் 06 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப் பட்டுள்ளதாகவும், பன்வில பிரதேச சபையின் அங்கீகரிக்கப்பட்ட 05 அரசியல் கட்சிகள் மற்றும் 01 சுயேச்சைக் குழுக்களின் 06 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

வத்துகாமம்  நகரசபை, கடுகண்ணாவ  நகரசபை, கம்பளை நகரசபை, தும்பனை, ஹாரிஸ்பத்துவ, அக்குரண, பூஜாபிட்டிய, பாததும்பர, உடதும்பர, மினிபே, குண்டசாலை, பாதஹேவஹெட, கங்கவட்ட   கோரலய, யட்டிநுவர, உடுநுவர, உடபலாத்த   கங்க இஹலகோரல , மற்றும் பஸ்வாகே கொரல்ல  ஆகிய பிரதேச சபைகளுக்கான வெடிப்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன என்றார்.

மாத்தளை

மாத்தளை மாவட்ட தேர்தல் தெரிவு அத்தாட்சி அதிகாரி தேஜானி திலகரட்ன தெரிவிக்கையில், மாத்தளை மாவட்டத்தில் 11 பிரதேச சபைகளுக்கும் இரண்டு மாநகர சபைகளுக்குமான 14 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் பிரதான கட்சிகள், சுயாதீன கட்சிகள் உட்பட 95 கட்சிகள் கட்டுப்பணம் செலுத்திய செலுத்தியுள்ளன. அவற்றில் பல்வேறு குறைப்பாடுகள் காரணமாக 14 கட்சிகளுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு 81 கட்சிகளின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ஏற்கனவே மாத்தளை மாநகர சபைக்கு போட்டியிட்ட ஜனநாயக மக்கள் முன்னனியின் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது என்றார்.

Related posts

மீண்டும் ஈரானின் ஜனாதிபதியானார் ருஹானி!

wpengine

மடு புனித பிரதேசம்! ஜனாதிபதி செயலாளர் தலைமையில் கூட்டம்

wpengine

அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் – வடமாகாண முஸ்லிம் பிரஜைகள் குழுவினர் சந்திப்பு

wpengine