பிராந்திய செய்திவவுனியா

வவுனியா தேவகுளம் வயல்வெளியில் இளைஞரின் சடலம்..!

வவுனியா தேவகுளம் வயல்வெளியில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று காலை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த முனிரத்தினம் கருணா என்ற 23 வயது இளைஞனே இவ்வாறு வயல்வெளியில் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரின் சடலம் காணப்படும் பகுதிக்கு அருகில் அவர் கொண்டு வந்த பை, பாதணி மற்றும் தலைக்கவசம் காணப்படுவதோடு குறித்த பகுதிக்கு வெளியில் உள்ள வீதியில் மோட்டார் சைக்கிளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சடலத்தை இன்று காலை அவதானித்த ஊரவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலத்தை மீட்டதோடு மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் பொருளாளர் பதவியிலிருந்து விலகும் தி.பரஞ்சோதி..!

Maash

கடந்த ஆட்சியின் வீட்டுத்திட்டங்களை நடைமுறைப்படுத்துங்கள் அடைக்கலம்

wpengine

கூட்டமைப்பின் சமகால அரசியல் தொடர்பில் மன்னாரில் கூட்டம்

wpengine