அஸ்வெசும திட்டத்தில் வசதி படைத்தவர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
அஸ்வெசும தொடர்பான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டச் செயலர்கள், அனைத்துப் பிரதேச செயலர்களுடனான செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்றது. இதன் போதே ஆளுநர் இதனை தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அஸ்வெசும திட்டம் தொடர்பில் மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். வறுமை நிலையிலுள்ள பலர் இந்தத் திட்டத்துக்குள் உள்வாங்கப்படவில்லை.
அதேநேரம் வசதி வாய்ப்புள்ள சிலரும் இதில் உள்ளெடுக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் என்னிடம் தினமும் முறையிடுகின்றனர். இந்தப் பிரச்சினைகளை விரைவாகத் தீர்க்கவேண்டும் என்றார்.
☀️ வன்னிநியூஸ் வட்ஸ்ப் குழுவில் இணைய: https://chat.whatsapp.com/EuAtDr7KEaH0ADVKTTsbGK