யாழ்ப்பாணம்

52 பௌத்த பிக்குகளின் பாதயாத்திரைக்கு யாழில் அமோக வரவேற்பு.

இலங்கை, தாய்லாந்து, மியான்மர் மற்றும் லாவோஸை பிரதிநிதித்துவப்படுத்தும் 52 பௌத்த பிக்குகளின் பங்குபற்றுதலுடன், “உலக சமாதானத்திற்கான மைத்திரி பாத யாத்திரை” பெப்ரவரி 07 அன்று திஸ்ஸஹாராம ரஜமகா விகாரையில் இருந்து ஆரம்பமாகி நேற்று முன்தினம் (08) யாழ்ப்பாணம் நாகதீப ரஜமஹா விகாரையை சென்றடைந்தது.

கடற்படையின் பௌத்த சங்கத்தின் பங்களிப்புடன், இந்த பாத யாத்திரையில் வருகைத்தந்த பிக்குகள் மற்றும் ஏனையவர்களுக்கு தேவையான வசதிகளை கடற்படையினர் ஏற்பாடு செய்தனர்.

இதன்படி, தென் மாகாணம், ஊவா மாகாணம், சம்பரகமுவ மாகாணம், வடமேற்கு மாகாணம், மத்திய மாகாணம், வடமத்திய மாகாணம் மற்றும் வடமாகாணத்தை உள்ளடக்கிய “உலக சமாதானத்திற்கான மைத்திரி பாத யாத்திரை” வடமத்திய கடற்படை கட்டளை ஊடாக வடக்கு கடற்படை கட்டளையை அண்மித்த போது, இவ் பாதயாத்திரையில் கலந்து கொண்ட பிக்குகளுக்கு பௌத்த சமய முறைப்படி கிலன்பச மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டதுடன், முதலுதவி உள்ளிட்ட ஏனைய வசதிகளையும் கடற்படையினர் செய்து கொடுத்தனர்.

Related posts

யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட, தீ விபத்தில் சிக்கிய மன்னார் யுவதி மரணம் .

Maash

யாழ். கோப்பாய் பகுதியில் மகளை அடித்து துன்புறுத்திய தாய் கைது !

Maash

யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகள் தட்டுவதை தடுக்க சி.சி.டி.வி கேமராக்கள்!

Maash