அரசியல்செய்திகள்

அநுரவுக்கும் டிரான் அலஸுக்கும் இடையிலான டீல் ! இதுவே தேசபந்து கைது செய்யப்படவில்லை .

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கும் இடையிலான ஒப்பந்தமே, முன்னாள் ஐஜிபி தேசபந்து தென்னகோனை கைது செய்வதைத் தடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார்.

ஹோமகமவில் நடந்த  கூட்டத்தில் கருத்துரைத்த அவர், 

டிரான் அலஸ் என்ன மோசடி செய்தாலும் அல்லது கொலை செய்தாலும் அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் ஜனாதிபதி அநுரகுமார எடுக்க மாட்டார்.

அத்துடன், தேசபந்து கைது செய்யப்படாமைக்கு பின்னால் டிரான் அலஸ் இருக்கிறார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

அநுரவுக்கும், டிரான் அலஸுக்கும் இடையில் உள்ள ஒப்பந்தப்படி, அலஸ் மோசடி செய்தாலோ, ஒருவேளை ஈ விசா அல்லது ஈ-கடவுச்சீட்டு அல்லது அவர் எந்தவொரு கொலை செய்தாலும், அவருக்கு எதிராக அநுரகுமார எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார் என்றும்  சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்த ஒப்பந்தம் குறித்த விபரங்களை் எதனையும் சம்பிக்க ரணவக்க வெளியிடவில்லை. 

Related posts

பஸ் மிதிபலகையில் பயணித்து தவறி விழுந்து படுகாயமடைந்தவர் மரணம் .!

Maash

மட்டக்களப்பு விவசாயியிடம் இலஞ்சம் பெற்ற கமநல உத்தியோகத்தர் கைது.!

Maash

கற்பிட்டியில் இடம்பெற்ற விபத்தில் 20 வயது இளைஞன் உயிரிழப்பு.!

Maash