சுதந்திரப் பறவைகளின் பன்னாட்டு மகளிர் தின நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் இன்று(08) இன்று காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது.
சுதந்திரப் பறவைகள் மகளிர் பேரவையின் தலைவி திருமதி. முராளினி தினேஸ் தலைமையில் குறித்த நிகழ்வானது இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவருமான சி. வி. கே சிவஞானம் ஆகியோர்கள் பிரதமர் அதிதிகளாக கலந்து கொண்டு பன்னாட்டு மகளிர் தினத்தை சிறப்பித்துள்ளார்.