பிரதான செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வவுனியா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்.

வவுனியா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் என். மாஹிர் தலைமையில் வவுனியா மாவட்ட கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நேற்று(07) மாங்குளம், நேரிய குளத்தில் நடைபெற்றது.

இதில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பல முக்கியமான விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நிஸாம் காரியப்பர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம். எஸ். உதுமாலெப்பை, வவுனியா நகரசபை முன்னாள் உறுப்பினர் ஏ. எல். எம். முனவ்வர் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வவுனியா மாவட்ட மத்திய குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் வீழ்ச்சி, உற்பத்தியாளர்கள் சிரமம் .!

Maash

அண்ணாசாலையில் திடீர் பள்ளம் – கார், பஸ் கவிழ்ந்து விபத்து ( படங்கள்)

wpengine

இரண்டு மாதத்திற்குள் 1300 மில்லியன் ரூபா பெறுமதியான அரிசி இந்தியாவிலிருந்து இறக்குமதி

wpengine