சம்பூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கடற்படை அதிகாரியுடன் முரண்பட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என ரவூப் ஹக்கீம் அறிவித்துள்ளமை முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளுக்கு சாட்டை அடியாக அமைந்துள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
அதேவேளை, இவ்வறிவிப்பு இனவாதிகளின் முகங்களில் கரி பூசும் வகையில் அமைந்துள்ளதுடன், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளுக்கும் – சந்தேகங்களுக்கும் ஹக்கீம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என அவர் மேலும் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:
–
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ்; நஸீர்; அஹமட் கடற்படை அதிகாரியுடன் முரண்பட்டமையினால் முஸ்லிம் சமூகம் வெட்கித் தலைகுனிய வேண்டியேற்பட்டது. இச்சம்பவத்தை இனவாத அடிப்படையில் சில ஊடகங்களும், அமைப்புக்களும் திரிவு படுத்தி சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் தொடர்பில் பிழையான கருத்தை ஏற்படுத்த முற்பட்;டது.
குறிப்பாக இணையதளங்கள் மூலமாக முஸ்லிம்களுக்கு எதிரான பரவலான கருத்துக்கள் வெளியாகியிருந்தன. அதுமட்டுமல்லாது, மட்டக்களப்பு நகரில் முதல் முறையாக முஸ்லிம்களுக்கு எதிராக பிக்குகள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர். இச்சந்தப்பத்தில் முஸ்லிம்களை புண்படுத்தும் வகையில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் மட்டு. நகர வியாபாரிகள் பொறுமையாக இருந்தனர்.
அவர்கள அன்று பொறுமை இழந்திருந்தால் மிகப்பெரிய கலவரமே வெடித்திருக்கும். இந்த அசாதாரண நிலை ஏற்படுவதற்கு பிரதான காரணமாக இருந்த கிழக்கு முதல்வரின் செயற்பாட்டை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கண்டித்துள்ளதுடன், எவ்வித நிபந்தனையும் இன்றி பகிரங்க மன்னிப்பு கோருமாறும் தெரிவித்துள்ளார்.