பிராந்திய செய்திமுல்லைத்தீவு

320,000 ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரட்களை விற்க முயன்ற புதுக்குடியிருப்பு பகுதி இளைஞர் கைது .!

3 இலட்சத்து 20,000 ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட் பெட்டிகளை விற்க முயன்ற புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த இளைஞர் ஒருவரை யாழ் அச்சுவேலி பொலிஸார் இன்று (06) மாலை கைது செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது…

யாழ் அச்சுவேலி பஸ் நிலையத்தில் வெளிநாட்டு சிகரட் பெட்டிகளை விற்பதற்காக இளைஞர் ஒருவர் வருகை தந்துள்ளதாக பொலிஸாருக்கு புலனாய்வு தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் இளைஞர் ஒருவரை 160 வெளிநாட்டு சிகரட் பெட்டிகளுடன் கைது செய்தனர்.

பின்னர் 22 வயதான முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த இளைஞர் ஒருவரை கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட சிகரட்டுகளின் பெறுமதி 3 லட்சத்து 20,000 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபரிடம் இருந்து 25,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

அரசாங்க அதிபர் அ.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் இலவச உரம் வழங்கும் நிகழ்வு

wpengine

வவுனியா உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவிகளை காணவில்லை

wpengine

யாழ்ப்பாணத்தில் 50 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி மஹிந்த

wpengine