அரசியல்செய்திகள்

உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி…?

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வேட்புமனுக்கள் கோருவதோடு தேர்தல் திகதியும் அறிவிக்கப்படும் என்று சில கட்சிகள் தெரிவித்திருப்பது முற்றிலும் தவறானது என்றும் தலைவர் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தல் ஆணையக்குழு கூட்டம் இன்று (6) காலை ராஜகிரியவில் உள்ள தேர்தல் செயலக வளாகத்தில் நடைபெற்றது.

பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிடும் போதே தேர்தல் ஆணைக்குழு தலைவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதேவேளை, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் கடந்த 3 ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், நேற்று (5) பிற்பகல் 4:15 மணி வரையில் கட்டுப்பணம் செலுத்திய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் குறித்த அறிக்கையையும் தேர்தல் ஆணைக்குழு இன்று (6) வெளியிட்டது.

Related posts

இந்தியா-இலங்கை கூட்டாண்மை எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியம், இந்திய உயர் ஸ்தானிகர் தெரிவிப்பு . !

Maash

முடிந்தால் 1350 ரூபாவிலிருந்து 1 ரூபா அடிப்படை சம்பளத்தை அதிகரித்துக் காட்டுங்கள், ஜீவன் சவால்.!

Maash

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் வழமைக்கு!

Maash