செய்திகள்பிரதான செய்திகள்

அமெரிக்காவின் தொழினுட்பத்துடனான “ஸ்பீட் கன்” (Speed Gun) இலங்கைப் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட புதிய தொழினுட்பத்துடனான “ஸ்பீட் கன்” (Speed Gun) இலங்கைப் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

வீதி விபத்துகளைக் குறைத்தல் மற்றும் பாதுகாப்பை உறுதிப்பத்தும் நோக்கில் பொலிஸாருக்கு இந்த கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இரவு நேரங்களில் வாகனங்களை கண்காணிப்பதற்கு இந்த உபகரணங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.

இவை சுமார் 1.2 கிலோமீற்றர் தூரத்திலிருந்து வாகனங்களைக் கண்டறிந்து, வாகனத்தின் வேகம், சாரதியின் புகைப்படம் மற்றும் வாகனத்தின் இலக்கத் தகடு எண் போன்ற அத்தியாவசியத் தரவுகளைப் பதிவுசெய்யும்.

இந்தத் தகவலைப் பதிவுசெய்து நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்ப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, 35 கருவிகள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் மேலும் 15 சாதனங்கள் விரைவில் இறக்குமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு கருவிக்கு மாத்திரம் அரசாங்கத்திற்கு சுமார் 3.3 மில்லியன் இலங்கை ரூபாய் செலவாகிறது.

நாட்டில் போக்குவரத்து விபத்துகளுக்கு அதிக வேகம் முக்கிய காரணம் என்றும், இதன் விளைவாக தினமும் 08 முதல் 10 பேர் உயிரிழப்பதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்தார்.

Related posts

100 வயது கொண்டவர்களுக்கு வீட்டு தேடி பணம் வழங்கப்படும்.

wpengine

மன்னாருக்கு புதிய அதிபர்! முன்னால் அதிபரின் ஒய்வுதியம் பலருக்கு சந்தோஷம்.

wpengine

அன்று வசீம் தாஜுதீன் இன்று ஷாகிப் முஹம்மது சுலைமான் நாளை யார்?

wpengine