Breaking
Mon. May 6th, 2024

தொழில்நுட்ப துறையின் அடுத்தகட்ட வளர்ச்சியாக பேஸ்புக் லைவ் (facebook live) மூலம் விண்வெளியில் உள்ள வீரர்களுடன் பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கபேர்க் உரையாடவுள்ளார்.

விண்வெளியில் பல்வேறு நாடுகளின் வீரர்கள் தங்கியுள்ள சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது, அமெரிக்க விண்வெளி நிலையமான நாசாவின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த விண்வெளி நிலையம் பல ஆண்டுகளாகச் செயற்பட்டு வருகிறது.

அங்கு தங்கியுள்ள டிம் கோப்ரா, ஜெஃப் வில்லியம்ஸ் மற்றும் டிம்பீக் ஆகிய விண்வெளி வீரர்களுடன் facebook live மூலம் மார்க் மார்க் சக்கபேர்க் வருகிற ஜூன் முதலாம் திகதி உரையாட உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

இந்த வரலாற்று நிகழ்வினை நாசா மையத்தின் பேஸ்புக் பக்கத்தின் மூலம் உலக மக்கள் கண்டுகளிக்கலாம் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

தகவல் தொடர்புத் துறையில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் இந்த நிகழ்வு, விண்வெளியில் உள்ள வீரர்களுடன் எளிதில் தொடர்புகொள்ளும் வகையில் புதிய கதவுகளைத் திறந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *