செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

வவுனியா கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம், நகரசபை நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் அதிகரித்த விபத்துக்கள் .

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதி மற்றும் ஏ9 வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதுடன், இதற்கு நகரசபை நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக  நகரை சூழ பல பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்கள் அதிகம் காணப்படுகின்றது.

இந்நிலையில் கல்வி நடவடிக்கைகளுக்காக இவ்வீதிகளினை பயன்படுத்தும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும்  அரச, தனியார் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் இக்கட்டாக்காலி மாடுகளால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

அத்துடன் இக்கட்டாக்காலி மாடுகளால் விபத்துக்குள்ளாகும் நிலையும் அண்மைய நாட்களாக  அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இந்நிலையில் இது குறித்து கால்நடைகளை பராமரிப்பாளர்கள் கவனம் எடுக்க வேண்டும் அல்லது வவுனியா நகரசபையானது கால்நடைகள் பராமரிப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக வவுனியா நகரசபை செயலாளர் பாலகிருபனிடம் கேட்கப்பட்ட போது,

தொடர்ச்சியாக கட்டாக்காலி மாடுகளை பிடிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக வருட ஆரம்பத்திலும் நகரில் கட்டாக்காலியாக திரிந்த 70 மாடுகள் பிடிக்கப்பட்டதுடன் அம்மாடுகளின்  உரிமையாளர்களிற்கு தண்டபப்ணமும் அறவிடப்பட்டிருந்தது என தெரிவித்தார்.

Related posts

டக்ஸன் பியூஸ்லஸின் மரணம்! அமைச்சர் G.L.பீரிஸிற்கு அடைக்கலநாதன் கடிதம்

wpengine

வவுனியாவில் மன்னாரை சேர்ந்த ஒருவருக்கு 20ஏக்கர் காணி மக்கள் ஆர்ப்பாட்டம்

wpengine

பிரதேச சபை உறுப்பினர் சடலமாக மீட்பு! வீட்டை எட்டிப் பார்த்த போது துர்நாற்றம் வீசியது.

wpengine