செய்திகள்பிரதான செய்திகள்

எரிபொருள் தட்டுப்பாடு அச்சத்தில் காலை இழந்த சாரதி . !

பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என்ற பயத்தில் தனது முச்சக்கர வண்டியில் எரிபொருள் நிரப்பு நிலையம் சென்ற முச்சக்கர சாரதியொருவர், விபத்தொன்றில் இருகால்களையும் இழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் கடந்த வௌ்ளிக்கிழமை(28) இரவு 10.30 மணியளவில் இரத்தினபுரி அருகே நடைபெற்றுள்ளது.

இரத்தினபுரி, ஹிதல்லன பிரதேசத்தைச் சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தந்தையான 57 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு இருகால்களையும் இழந்துள்ளார்.

பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக முச்சக்கர வண்டிக்குத் தேவையான எரிபொருள் கிடைக்காது போய்விடும் என்ற அச்சத்தின் காரணமாக அவர் முச்சக்கர வண்டியில் எரிபொருள் நி​ரப்பு நிலையமொன்றை நாடி வந்துள்ளார்.

எரிபொருள் நிரப்பும் நிலையம் அருகே வரிசையில் தனது முச்சக்கர வண்டியை நிறுத்திவிட்டு, கீழே இறங்கி நின்றிருந்த நிலையில், கவனயீனமாக செலுத்தப்பட்ட கார் ஒன்றினால் மோதுண்ட நிலையில், முச்சக்கர வண்டி சாரதி இரத்தினபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும், அவரது இரண்டு கால்களும் நசுங்கிப் போயிருந்த நிலையில், வேறு வழியின்றி வெட்டியகற்றப்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய கார் சாரதி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related posts

வரட்சி உலர் உணவு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை

wpengine

முஸ்லிம் அரசியலின் இயலாமை! பிரதம அதிதியாக ஹஸன் அலி,பஷீர் சேகுதாவூத்

wpengine

ஆறுமுகம் தொண்டமானுக்கு சவால் விடுக்கும் வகையில் முரளிதரன் நுவரெலியாவில்

wpengine