வவுனியா

வவுனியா, பூந்தோட்டம் வீதியில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி தீ பற்றியது..!

வவுனியா, பூந்தோட்டம் வீதியில் நேற்று கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வவுனியா நகர் பகுதியில் இருந்து பூந்தோட்டம் நோக்கிச் சென்ற காரும் பூந்தோட்டம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய நிலையில் விபத்துக்குள்ளாகி இருக்கின்றது. 

இதனை அடுத்து இரு வாகனங்களும் தீப்பற்றி எரிந்த நிலையில் தீயை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் அது சாத்தியப்படவில்லை. 

இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு காரில் வந்தவர்கள் காப்பாற்றப்பட்டனர். 

இந்நிலையில் வவுனியா நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்த முயற்சித்த போதிலும் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் முழுமையாக எரிந்து தீக்கிரையாகியுள்ளது. 

விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Related posts

விளக்கு ஏற்ற தேங்காய் எண்ணெக்கு பதிலாக பெற்றோலை பயன்படுத்தியதால், வீடு தீப்பற்றி எரிந்தது.

Maash

விசேட அதிரடிப்படையின் வாகனம் மோட்டார் சைக்கிலுடன் மோதியதில் ஒருவர் மரணம் .

Maash

வவுனியா – கூமாங்குள வன்முறை தொடர்பில் தொடரும் கைதுகள்..!!!

Maash