செய்திகள்பிராந்திய செய்திமுல்லைத்தீவு

முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எதிராக விசாரணை..!

முல்லைத்தீவு (mullaithivu) வலயக்கல்விப் பணிப்பாளருக்கு எதிராக பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு முன்வைத்த முறைப்பாட்டை சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப விசாரணை செய்யுமாறு வட மாகாண பிரதம செயலாளருக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட நிலையில் கல்வி அமைச்சினால் நடவடிக்கை எடுக்காமல் தட்டிக் கழிக்கப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு கல்வித்துறையில் முறைகேடுகள்
இந்நிலையில் புதிய அரசாங்கம் பதவியேற்ற நிலையில் வடக்கு கல்வித்துறையில் உள்ள முறைகேடுகள் தொடர்பில் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பொதுச்சேவை ஆணைக்குழு கல்விச்சேவை ஆணைக்குழுவிற்கு பாரப்படுத்திய நிலையில், இம்முறைப்பாட்டை ஆராய்ந்த கல்விச்சேவை ஆணைக்குழு வலுவில் உள்ள சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக வடமாகாண பிரதம செயலாளருக்கு பாரப்படுத்தி உள்ளது.

Related posts

இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் இராஜினாமா..!

Maash

காலாவாதியான அரசியலமைப்பை இரத்துச் செய்து, பொதுஜன வாக்கெடுப்புடன் புதிய அரசியலமைப்பு . !

Maash

 100 சிறிய பாடசாலைகளை மூடுவதில் அரசாங்கம் கவனம்..!

Maash