Breaking
Sun. Nov 24th, 2024
SAMSUNG CSC
(அஷ்ரப் ஏ சமத்)

இந்தியாவையும்,தமிழ் நாட்டையும் நாம் பகைத்துக் கொண்டு இனியும் நாம் செயற்பட முடியாது. இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவா்கள் யப்பாணில்  நடைபெற்ற ஜீ 7 நாடுகளில் பங்கு பற்ற அழைக்கப்பட்டுளாா்.

அதே போன்று பிரதமர் தென்கொரியா அழைக்கப்பட்டுள்ளாா்.  தற்பொழுது உலக நாடுகளில் இலங்கை பற்றிய நல்லதொரு அபிப்பிராயம் ஏற்பட்டுள்ளது. என மொழிகள் இன ஒருமைப்பாட்டு அமைச்சா் மனோ கனேசன் உரையாற்றினாா்.

தமிழ்நாடு பிரதம அமைச்சா் புரட்சித் தலைவி ஜெயலலிதா ஜெயராம் மீண்டும் முதலமைச்சராக வெற்றி பெற்றதையிட்டு கொழும்பில் இயங்கும் எம்.ஜி. ஆர் மன்றம்  வெற்றிக்கழிப்பை நேற்று (28) கொண்டாடியது. இந் நிகழ்வு கொழும்பு பிரைட்டன் ஹோட்டலில் எம். ஜி. ஆர் மன்றத்தின் தலைவா் இத்ரீஸ்  மற்றும் இம்ரான் நெயினாா், புரவலா் ஹாசீம் உமா், தலைமையில் நடைபெற்றது.

SAMSUNG CSC
இந் நிகழ்வில் கலைச் செல்வன் ரவுப், சமுகஜோதி ரபீக் மற்றும் பலரும் எம். ஜி.ஆர்,  ஜெயலலிதா  அறிஞா் அண்னா பற்றி சிறப்புரை ஆற்றினாா்கள்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சா்  மனோ கனேசன் மேற்கண்டவாறு உரையாற்றினாா்.

SAMSUNG CSC
அவா் அங்கு தொடா்ந்து உரையாற்றுகையில்  தெரிவித்தாவது.

ஆனால் கடந்த மஹிந்தராஜபக்சவும் அவா்கள் ஆட்சியில்  உலக நாடுகள் இந்தியா தமிழ் நாடு போன்ற நாடுகளை அவா் பகைத்துக் கொண்டாா்கள். மகிந்தவின் சிசியா்களும் இந்தியா தமிழ் நாடு அமேரிக்கா நாடுகளை பகைத்துக் கொண்டு அந் நாடுகளுக்கு எதிராக குரல்  கொடுத்துக் கொண்டு செயல்பட்டாா்கள். இவா்களது குரல்கள் கடந்த ஜனவரி 8ஆம் திகதி இந்த நாட்டு மக்களால் முடிபுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

SAMSUNG CSC
தமிழ் நாட்டில் இலங்கையைச் சோ்ந்த 1 இலட்சம் அகதிகள் அங்கு வாழ்கின்றாா்கள் அவா்களை பாதுகாப்பது இந்திய அரசாங்கமாகும்  அவா்களுக்கு இலங்கைப் பிரச்சினைகளை பற்றி குரல் கொடுப்பது நியமாமாகும் இந்தியாவின் முன்னாள் பிரதமா ராஜ்ஜிவு காந்தீ. ஜே. ஆர். ஜெயவா்த்தன ஆகியோா் செய்து கொண்ட உடன் படிக்கையில் பேரிலேயே இன்று இலங்கை மாகாண சபைகள் உறுவாக்கப்ட்டது. 13 வது திருத்தம் கொண்டுவரப்பட்டது.

ஆகவே இந்தியப் பிரதமா் மற்றும் தமிழ் நாடு பிரதம அமைச்சா் ஜெயலலிதா ஆகியோாரை இணைத்துக் நாம் நட்புள்ளவா்களாக செயல்பட வேண்டும். என நான் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவுடனனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் சொல்லியிருக்கின்றேன்.

இந்தியாவின் தமி்ழ் நாட்டின் பிரமத அமைச்சா் ஜெயலலிதா இம்முறை மீண்டும் அவா் தமிழ்நாடு பிரத அமைச்சாராக தெரிபு செய்யபட்டதையிட்டே இன்று  கொழும்பில் பழம் பெறும் அமைப்பான எம். ஜி. ஆர் மண்றம்  வெற்றிக்கழிப்பை கொண்டாடுகின்றது. இதனை ஏற்பாடு செய்த அந்த அமைப்பின் தலைவா் இதிரிஸ் செயலாளா் இம்ரான நெயினாா் புரவலா் ஹாசீம் உமா் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந் நிகழ்வில்
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *